Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nalla Devanae Gnana Jeevane Lyricsநல்ல தேவனே ஞான ஜீவனே

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Also searched as: Nalla Devane Nyana

Nalla Devanae Gnana Jeevane Lyrics in Tamil & English

Verse 1

நல்ல தேவனே, ஞான ஜீவனே;

வல்ல உமது கருணை தன்னை

வாழ்த்திப் போற்றுவேன்.

Nalla thaevanae, njaana jeevanae;

Valla umathu karunai thannai

Vaazhththip potruvaen.

Verse 2

போன ராவிலே பொல்லாங்கின்றியே,

ஆன நல்ல அருளினாலே

அன்பாய்க் காத்தீரே.

Pona raavilae pollaangindriyae,

Aana nalla arulinaalae

Anpaayk kaaththeerae.

Verse 3

காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையே

சாலவும் துதித்துப் போற்றிச்

சார்ந்து கொள்ளுவேன்.

Kaalaiyaik kandaen, karththaa ummaiyae

Saalavum thuthiththup potris

Saarnthu kolluvaen.

Verse 4

சென்ற ராவதின் இருளைப்போலவே,

என்றன் பாவ இருளைப் போக்கி,

இலங்கப் பண்ணுமே!

Sendra raavathin irulaippolavae,

Endran paava irulaip pokki,

Ilangap pannumae!

Verse 5

இன்று நானுமே இன்பமாகவே,

உன்றன் வழியில் நடக்கக் கருணை

உதவவேணுமே!

Indru naanumae inpamaagavae,

Undran vazhiyil nadakkak karunai

Uthavavaenumae!

Verse 6

ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே,

எளியன் இன்றும் நடக்க ஆவி

ஈந்தருளுமே!

Oliyin pillaiyaay ookkamaagavae,

Eliyan indrum nadakka aavi

Eentharulumae!

Verse 7

கையைக் காவுமே, கண்ணைக் காவுமே!

மெய்யைக் காத்து என்றன் மனதை

மிகவும் காவுமே!

Kaiyaik kaavumae, kannaik kaavumae!

Meyyaik kaaththu endran manathai

Migavum kaavumae!

Nalla Devanae Gnana Jeevane PPT – PowerPoint Slides

Download நல்ல தேவனே ஞான ஜீவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N