1 Samuel 9:27 in Tamil
அவர்கள் பட்டணத்தின் கடைசி மட்டும் இறங்கி வந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்துநில் என்றான்.
Avarkal pattanaththin kadaisi mattum irangi vanthabothu, saamuvael savulaip paarththu: vaelaikkaaranai namakku munnae nadanthubogas sol endraan; appadiyae avan nadanthu ponaan; ippozhuthu naan thaevanudaiya vaarththaiyai unakkuth therivikkumbadikku, nee satrae thariththunil endraan.
1 Samuel 9:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் பட்டணத்தின் கடைசிவரை இறங்கிவந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்துபோனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படி, நீ சற்று இங்கே நில் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இருவரும் பட்டணத்தின் எல்லையை அடைந்ததும், சாமுயேல் சவுலிடம், “உன் வேலையாளை உனக்கு முன்னே நடந்து போகச் சொல். ஆனால் இறைவனின் வார்த்தையை நான் உனக்குத் தெரியப்படுத்தும்வரை நீ சிறிது தாமதித்துச் செல்” என்றான். எனவே வேலையாள் அவனுக்கு முன்னே போனான்.
- Tamil Easy Reading Version
- சவுலும் வேலைக்காரனும் சாமுவேலோடு ஊரின் எல்லைக்கு சென்றனர். சாமுவேல் சவுலிடம் “உனது வேலைக்காரனை நமக்கு முன்னே போகச் சொல். நான் உனக்காக தேவனிடமிருந்து ஒரு செய்தியை வைத்திருக்கிறேன்” என்றான். வேலைக்காரனும் முன் நடந்தான்.
1 Samuel 9:27 in English
- King James Version (KJV)
- [And] as they were going down to the end of the city, Samuel said to Saul, Bid the servant pass on before us, (and he passed on,) but stand thou still a while, that I may shew thee the word of God.
- World English Bible (WEB)
- As they were going down at the end of the city, Samuel said to Saul, “Tell the servant to go on ahead of us.” He went ahead, then Samuel said, “But stand still first, that I may cause you to hear God’s message.”
- American Standard Version (ASV)
- As they were going down at the end of the city, Samuel said to Saul, Bid the servant pass on before us (and he passed on), but stand thou still first, that I may cause thee to hear the word of God.
- Bible in Basic English (BBE)
- And on their way down to the end of the town, Samuel said to Saul, Give your servant orders to go on in front of us, (so he went on,) but you keep here, so that I may give you the word of God.
- Darby Translation (DBY)
- As they were going down to the end of the city, Samuel said to Saul, Tell the servant to pass on before us (and he passed on), but stand thou still now, that I may cause thee to hear the word of God.
- Webster's Bible (WBS)
- [And] as they were going down to the end of the city, Samuel said to Saul, Bid the servant pass on before us, (and he passed on,) but stand thou still a while, that I may show thee the word of God.
- Young's Literal Translation (YLT)
- They are going down in the extremity of the city, and Samuel hath said unto Saul, 'Say to the young man that he pass on before us (and he passeth on), and thou, stand at this time, and I cause thee to hear the word of God.'
Read in context
- 25அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவன்மேல் வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான்.
- 26அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.
- 27அவர்கள் பட்டணத்தின் கடைசி மட்டும் இறங்கி வந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்துநில் என்றான்.
Cross references
- John 15:14–15 யோவான் 15:14–15நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
- 2 Kings 9:5–6 2 இராஜாக்கள் 9:5–6அவன் உட்பிரவேசித்தபோது, சேனாபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களெல்லாருக்குள்ளும் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாபதியாகிய உமக்குத்தான் என்றான். அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் வார்த்து, அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன்.
- 1 Samuel 20:38–39 1 சாமுவேல் 20:38–39நீ தரித்துநிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்துகூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான். அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
- 1 Samuel 15:16 1 சாமுவேல் 15:16அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.
Original words (Hebrew)
- down · H3381יָרַד yârad
- end · H7097קָצֶה qâtseh
- city · H5892עִיר ʻîyr
- Samuel · H8050שְׁמוּאֵל Shᵉmûwʼêl
- said · H559אָמַר ʼâmar
- Saul · H7586שָׁאוּל Shâʼûwl
- Bid · H559אָמַר ʼâmar
- servant · H5288נַעַר naʻar
- on · H5674עָבַר ʻâbar
- before · H6440פָּנִים pânîym
- on · H5674עָבַר ʻâbar
- stand · H5975עָמַד ʻâmad
- while · H3117יוֹם yôwm
- shew · H8085שָׁמַע shâmaʻ
- word · H1697דָּבָר dâbâr
- God · H430אֱלֹהִים ʼĕlôhîym
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.