2 Chronicles 14:15 in Tamil
மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
Mirugajeevangal iruntha kottaarangalaiyum avarkal idiththuppottu, thiralaana aadugalaiyum ottagangalaiyum saayththukkondu erusalaemukkuth thirumbinaarkal.
2 Chronicles 14:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அத்துடன் அவர்கள் மந்தை மேய்ப்போரின் கூடாரங்களையும் தாக்கி, திரளான செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், ஒட்டகங்களையும் கைப்பற்றி, அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.
- Tamil Easy Reading Version
- ஆசாவின் படை மேய்ப்பர்களின் கூடாரங்களையும் தாக்கியது. அவர்கள் அங்கிருந்த நிறைய வெள்ளாடுகளையும், ஒட்டகங்களையும் கவர்ந்தனர். பிறகு ஆசாவின் படையினர் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றனர்.
2 Chronicles 14:15 in English
- King James Version (KJV)
- They smote also the tents of cattle, and carried away sheep and camels in abundance, and returned to Jerusalem.
- World English Bible (WEB)
- They also struck the tents of those who had livestock, and carried away sheep and camels in abundance, then returned to Jerusalem.
- American Standard Version (ASV)
- They smote also the tents of cattle, and carried away sheep in abundance, and camels, and returned to Jerusalem.
- Bible in Basic English (BBE)
- And they made an attack on the tents of the owners of the cattle, and took away great numbers of sheep and camels and went back to Jerusalem.
- Darby Translation (DBY)
- They smote also the tents of cattle, and carried away sheep and camels in abundance, and returned to Jerusalem.
- Webster's Bible (WBS)
- They smote also the tents of cattle, and carried away sheep and camels in abundance, and returned to Jerusalem.
- Young's Literal Translation (YLT)
- and also tents of cattle they have smitten, and they capture sheep in abundance, and camels, and turn back to Jerusalem.
Read in context
- 13அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,
- 14கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.
- 15மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
Cross references
- 1 Chronicles 4:41 1 நாளாகமம் 4:41பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம் பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.
- 1 Samuel 30:20 1 சாமுவேல் 30:20எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
- Numbers 31:9 எண்ணாகமம் 31:9அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும, கொள்ளையிட்டு,
- Numbers 31:30–47 எண்ணாகமம் 31:30–47இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி, அவைகளை கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள். படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும், எழுபத்தீராயிரம் மாடுகளும், அறுபத்தொராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது. புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள். யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு. இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து. மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு. கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு, அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று. நரஜீவன்கள் பதினாறாயிரம் போ; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர். கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான். யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படியே சபை யாருக்கு வந்த பாதிப்பங்காவது: ஆடுகளில் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு, மாடுகளில் முப்பத்தாறாயிரம், கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு, நரஜீவன்கள் பதினாயிரம் பேருமே. இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.
- 1 Chronicles 5:21 1 நாளாகமம் 5:21அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர் களையும் பிடித்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.