Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 26:21 in Tamil

ராஜாவாகிய உசியா தன் மரண நாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.

Raajaavaagiya usiyaa than marana naalmattum kushdarogiyaayirunthu, karththarudaiya aalayaththukkup purambaakkappattabadiyinaal, oru thaniththa veettilae kushdarogiyaay vaasambanninaan; avan kumaaranaagiya yothaam raajaavin aramanai visaarippukkaaranaayirunthu, thaesaththin janangalai niyaayam visaariththaan.

Download verse image

2 Chronicles 26:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
Open Tamil Contemporary Version
உசியா அரசன் தான் சாகும் நாள்வரை குஷ்டவியாதி உடையவனாகவே இருந்தான். அவன் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவனாக குஷ்டவியாதியுடன் ஒரு புறம்பான வீட்டில் வாழ்ந்தான். அவனுடைய மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டு மக்களை ஆளுகை செய்தான்.
Tamil Easy Reading Version
உசியா எனும் அரசன் தொழு நோயாளியானான். அவனால் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு தனி வீட்டில் அவன் வசிக்க வேண்டியதாயிற்று. அவனது மகனான யோதாம் அரண்மனையைக் கட்டுப்படுத்தினான். அவனே ஜனங்களின் ஆளுநர் ஆனான்.

2 Chronicles 26:21 in English

King James Version (KJV)
And Uzziah the king was a leper unto the day of his death, and dwelt in a several house, [being] a leper; for he was cut off from the house of the LORD: and Jotham his son [was] over the king’s house, judging the people of the land.
World English Bible (WEB)
Uzziah the king was a leper to the day of his death, and lived in a separate house, being a leper; for he was cut off from the LORD’s house. Jotham his son was over the king’s house, judging the people of the land.
American Standard Version (ASV)
And Uzziah the king was a leper unto the day of his death, and dwelt in a separate house, being a leper; for he was cut off from the house of Jehovah: and Jotham his son was over the king’s house, judging the people of the land.
Bible in Basic English (BBE)
So King Uzziah was a leper till the day of his death, living separately in his private house; for he was cut off from the house of God; and Jotham his son was ruling over his house, judging the people of the land.
Darby Translation (DBY)
And Uzziah the king was a leper to the day of his death, and dwelt in a separate house, being a leper; for he was cut off from the house of Jehovah. And Jotham his son was over the king's house, judging the people of the land.
Webster's Bible (WBS)
And Uzziah the king was a leper to the day of his death, and dwelt in a separate house, [being] a leper; for he was cut off from the house of the LORD: and Jotham his son [was] over the king's house, judging the people of the land.
Young's Literal Translation (YLT)
And Uzziah the king is a leper unto the day of his death, and inhabiteth a separate house — a leper, for he hath been cut off from the house of Jehovah, and Jotham his son [is] over the house of the king, judging the people of the land.

Read in context

  1. 19அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.
  2. 20பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான்.
  3. 21ராஜாவாகிய உசியா தன் மரண நாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
  4. 22உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.
  5. 23உசியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Read all of 2 Chronicles 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.