2 Chronicles 28:21 in Tamil
ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.
Aagaas karththarudaiya aalayaththil oru pangum, raaja aramanaiyil oru pangum, pirabukkalin kaiyil oru pangum eduththu, aseeriyaavin raajaavukkuk koduththum, avanukku uthavigidaikkavillai.
2 Chronicles 28:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகாஸ் யெகோவாவுடைய ஆலயத்தில் ஒருபங்கும், ராஜ அரண்மனையில் ஒருபங்கும், பிரபுக்களின் கையில் ஒருபங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தபோதும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை.
- Open Tamil Contemporary Version
- ஆகாஸ் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும், அரச அரண்மனையில் இருந்தும், இளவரசர்களிடமிருந்தும் சில பொருட்களை எடுத்து, அவற்றை அசீரிய அரசனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான். ஆனால் அதுவும் அவனுக்கு உதவவில்லை.
- Tamil Easy Reading Version
- ஆகாஸ் கர்த்தருடைய ஆலயம், அரண்மனை, இளவரசர்களின் அரண்மனை ஆகியவற்றில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவந்தான். அவற்றை அசீரியா அரசனுக்குக் கொடுத்தான். எனினும் அது ஆகாசுக்கு உதவவில்லை.
2 Chronicles 28:21 in English
- King James Version (KJV)
- For Ahaz took away a portion [out] of the house of the LORD, and [out] of the house of the king, and of the princes, and gave [it] unto the king of Assyria: but he helped him not.
- World English Bible (WEB)
- For Ahaz took away a portion out of the LORD’s house, and out of the house of the king and of the princes, and gave it to the king of Assyria; but it didn’t help him.
- American Standard Version (ASV)
- For Ahaz took away a portion out of the house of Jehovah, and out of the house of the king and of the princes, and gave it unto the king of Assyria: but it helped him not.
- Bible in Basic English (BBE)
- For Ahaz took a part of the wealth from the house of the Lord, and from the house of the king and of the great men, and gave it to the king of Assyria; but it was no help to him.
- Darby Translation (DBY)
- For Ahaz stripped the house of Jehovah, and the house of the king and of the princes, and gave to the king of Assyria; but he was of no help to him.
- Webster's Bible (WBS)
- For Ahaz took away a portion from the house of the LORD, and from the house of the king, and of the princes, and gave [it] to the king of Assyria: but he helped him not.
- Young's Literal Translation (YLT)
- though Ahaz hath taken a portion [out] of the house of Jehovah, and [out] of the house of the king, and of the princes, and giveth to the king of Asshur, yet it is no help to him.
Read in context
- 19யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம் பண்ணினான்.
- 20அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.
- 21ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.
- 22தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.
- 23எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.
Cross references
- 2 Kings 16:8–9 2 இராஜாக்கள் 16:8–9கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான். அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
- 2 Kings 18:15–16 2 இராஜாக்கள் 18:15–16ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான். அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா கர்த்தருடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான்.
- 2 Chronicles 12:9 2 நாளாகமம் 12:9அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
- Proverbs 20:25 நீதிமொழிகள் 20:25பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.