2 Chronicles 29:23 in Tamil
பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
Pirpaadu paavanivaarana palikkaana vellaattukkadaakkalai raajaavukkum sabaiyaarukkum munpaagak konduvanthaarkal; avaigalmael avarkal thangal kaigalai vaiththaarkal.
2 Chronicles 29:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிறகு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அதன்பின் பாவநிவாரண காணிக்கைக்கான வெள்ளாடுகள் அரசனுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்பட்டன. அவர்கள் அவற்றின்மேல் தங்கள் கைகளை வைத்தனர்.
- Tamil Easy Reading Version
- பின்னர் ஆசாரியர்கள் ஆண் ஆட்டுக் கடாக்களை அரசனுக்கு முன்பு கொண்டு வந்தனர். ஜனங்களும் கூடினார்கள். இவை பாவப் பரிகாரப் பலிக்குரியவை. எனவே ஆசாரியர்கள் தம் கைகளை அவற்றின் தலையில் வைத்துவிட்டு கொன்றனர். ஆசாரியர்கள் அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்து பாவப்பரிகாரம் செய்தனர். அவர்கள் இவ்வாறு செய்ததால் தேவன் இஸ்ரவேலர்களது பாவங்களை மன்னித்துவிட்டார். அரசன் அந்த தகன பலிகளும் பாவப்பரிகாரப் பலிகளும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் செய்யப்பட வேண்டும் என்றான்.
2 Chronicles 29:23 in English
- King James Version (KJV)
- And they brought forth the he goats [for] the sin offering before the king and the congregation; and they laid their hands upon them:
- World English Bible (WEB)
- They brought near the male goats for the sin offering before the king and the assembly; and they laid their hands on them.
- American Standard Version (ASV)
- And they brought near the he-goats for the sin-offering before the king and the assembly; and they laid their hands upon them:
- Bible in Basic English (BBE)
- Then they took the he-goats for the sin-offering, placing them before the king and the meeting of the people, and they put their hands on them:
- Darby Translation (DBY)
- And they brought near the he-goats of the sin-offering before the king and the congregation; and they laid their hands upon them.
- Webster's Bible (WBS)
- And they brought forth the he-goats [for] the sin-offering before the king and the congregation; and they laid their hands upon them:
- Young's Literal Translation (YLT)
- and they bring nigh the he-goats of the sin-offering before the king and the assembly, and they lay their hands upon them;
Read in context
- 21அப்பொழுது ராஜ்யபாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.
- 22அப்படியே ஆசாரியர் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்துப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்.
- 23பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
- 24இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள்.
- 25அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது.
Cross references
- Leviticus 4:15 லேவியராகமம் 4:15சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்ல வேண்டும்.
- Leviticus 4:24 லேவியராகமம் 4:24அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.
- Leviticus 1:4 லேவியராகமம் 1:4அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.