2 Kings 11:18 in Tamil
பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.
Pinpu thaesaththin janangal ellaarum paagaalin kovilil poy, athai idiththu, athin palibeedangalaiyum athin vikkiragangalaiyum mutrilum udaiththu, paagaalin poojaasaariyaagiya maaththaanaip palibeedangalukku munpaagak kondrubottaarkal. aasaariyan karththarudaiya aalayaththai visaarikkum uththiyogastharai aerpaduththinaan.
2 Kings 11:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு தேசத்தின் மக்கள் எல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் சிலைகளையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் யெகோவாவுடைய ஆலயத்தை விசாரிக்கும் அதிகாரிகளை ஏற்படுத்தினான்.
- Open Tamil Contemporary Version
- நாட்டு மக்கள் யாவரும், பாகாலின் கோயிலுக்குப்போய் அதை இடித்து வீழ்த்தினார்கள். பாகாலின் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் துண்டுகளாக நொறுக்கி, பாகாலின் பூசாரியான மாத்தானையும் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றார்கள். இதன்பின் ஆசாரியன் யோய்தா யெகோவாவின் ஆலயத்திற்கு காவலாளரை நிறுத்தினான்.
- Tamil Easy Reading Version
- பிறகு அனைவரும் பொய்த் தெய்வமான பாகாலின் ஆலயத்திற்குச் சென்றனர். பாகாலின் உருவச்சிலைகளையும் பலிபீடங்களையும் தூள் தூளாக நொறுக்கினர். பாகாலின் ஆசாரியனான மாத்தனையும் பலிபீடத்தின் முன்னர் கொன்றனர். கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளராகச் சில மனிதரை ஆசாரியன் (யோய்தா) நியமித்தான்.
2 Kings 11:18 in English
- King James Version (KJV)
- And all the people of the land went into the house of Baal, and brake it down; his altars and his images brake they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of the LORD.
- World English Bible (WEB)
- All the people of the land went to the house of Baal, and broke it down. They broke his altars and his images in pieces thoroughly, and killed Mattan the priest of Baal before the altars. The priest appointed officers over the LORD’s house.
- American Standard Version (ASV)
- And all the people of the land went to the house of Baal, and brake it down; his altars and his images brake they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of Jehovah.
- Bible in Basic English (BBE)
- Then all the people of the land went to the house of Baal and had it pulled down: its altars and images were all broken to bits, and Mattan, the priest of Baal, they put to death before the altars. And the priest put overseers over the Lord's house.
- Darby Translation (DBY)
- Then all the people of the land went into the house of Baal, and broke it down: his altars and his images they broke in pieces completely, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of Jehovah.
- Webster's Bible (WBS)
- And all the people of the land went into the house of Baal, and broke it down; his altars and his images they broke wholly in pieces, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the the house of the LORD.
- Young's Literal Translation (YLT)
- And all the people of the land go in to the house of Baal, and break it down, its altars and its images they have thoroughly broken, and Mattan priest of Baal they have slain before the altars; and the priest setteth inspectors over the house of Jehovah,
Read in context
- 16அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்றுபோட்டார்கள்.
- 17அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து,
- 18பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.
- 19நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
- 20தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.
Cross references
- Deuteronomy 12:3 உபாகமம் 12:3அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.
- 1 Kings 18:40 1 இராஜாக்கள் 18:40அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
- 2 Kings 18:4 2 இராஜாக்கள் 18:4அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
- 2 Kings 10:26 2 இராஜாக்கள் 10:26பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
- Deuteronomy 13:5 உபாகமம் 13:5அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்துபுறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.
- Zechariah 13:2–3 சகரியா 13:2–3அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டுபொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப் பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.
- 2 Kings 23:4–6 2 இராஜாக்கள் 23:4–6பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க்கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான். யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றி விட்டான். தோப்பு விக்கிரகத்தைத் கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை ஜனபுத்திரருடைய பிரேதக் குழிகளின்மேல் போடுவித்தான்.
- 2 Kings 23:14 2 இராஜாக்கள் 23:14சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான்.
- Deuteronomy 13:9 உபாகமம் 13:9அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
- Exodus 32:20 யாத்திராகமம் 32:20அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.
- 2 Chronicles 23:17–20 2 நாளாகமம் 23:17–20அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்து வைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து, யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான். நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்துச் சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காதனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.
- 2 Chronicles 21:17 2 நாளாகமம் 21:17அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை.
Original words (Hebrew)
- people · H5971עַם ʻam
- land · H776אֶרֶץ ʼerets
- went · H935בּוֹא bôwʼ
- house · H1004בַּיִת bayith
- Baal · H1168בַּעַל Baʻal
- down · H5422נָתַץ nâthats
- altars · H4196מִזְבֵּחַ mizbêach
- images · H6754צֶלֶם tselem
- pieces · H7665שָׁבַר shâbar
- thoroughly · H3190יָטַב yâṭab
- slew · H2026הָרַג hârag
- Mattan · H4977מַתָּן Mattân
- priest · H3548כֹּהֵן kôhên
- Baal · H1168בַּעַל Baʻal
- before · H6440פָּנִים pânîym
- altars · H4196מִזְבֵּחַ mizbêach
- priest · H3548כֹּהֵן kôhên
- appointed · H7760שׂוּם sûwm
- officers · H6485פָּקַד pâqad
- house · H1004בַּיִת bayith
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.