2 Kings 11:2 in Tamil
யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிறராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளிஅறையில் ஒளித்துவைத்தார்கள்.
Yoraam ennum raajaavin kumaaraththiyum agasiyaavin sagothariyumaagiya yosaebaal, kolaiyunnappadugiraraajagumaararin naduvilirukkira agasiyaavin maganaagiya yovaasaik kalavaay eduththaal; avan kollappadaathabadi, avanaiyum avan thaathiyaiyum aththaaliyaalukkuth theriyaamal palliaraiyil oliththuvaiththaarkal.
2 Kings 11:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜாவாகிய யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலைசெய்யப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசை யாருக்கும் தெரியாமல் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் வளர்ப்புத் தாயையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் படுக்கையறையில் ஒளித்துவைத்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் அரசனான யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமான யோசேபாள், கொலைசெய்யப்படப்போகிற இளவரசர் மத்தியிலிருந்து அகசியாவின் மகன் யோவாசை அத்தாலியாளிடமிருந்து களவாகக் கொண்டுபோய், அவனுடைய செவிலியத் தாயுடன் படுக்கையறையில் வைத்தாள். இதனால் அவன் கொல்லப்படவில்லை.
- Tamil Easy Reading Version
- அரசனான யோராமின் மகள் யோசேபாள் ஆவாள். இவள் அகசியாவிற்குச் சகோதரி ஆவாள். யோவாஸ் அகசியா அரசனின் மகன்களுள் ஒருவன். மற்றவர்கள் கொல்லப்பட்டபோது அவள் அவனைக் காப்பற்றி ஒளித்து வைத்தாள். தன் படுக்கையறையிலேயே யோவாசையும் அவனது தாதியையும் மறைத்து வைத்தாள். இவ்வாறு யோவாஸ் அத்தாலியாவால் கொல்லப்படாமல் தப்பித்தான்.
2 Kings 11:2 in English
- King James Version (KJV)
- But Jehosheba, the daughter of king Joram, sister of Ahaziah, took Joash the son of Ahaziah, and stole him from among the king’s sons [which were] slain; and they hid him, [even] him and his nurse, in the bedchamber from Athaliah, so that he was not slain.
- World English Bible (WEB)
- But Jehosheba, the daughter of King Joram, sister of Ahaziah, took Joash the son of Ahaziah, and stole him away from among the king’s sons who were slain, even him and his nurse, and put them in the bedroom; and they hid him from Athaliah, so that he was not slain.
- American Standard Version (ASV)
- But Jehosheba, the daughter of king Joram, sister of Ahaziah, took Joash the son of Ahaziah, and stole him away from among the king’s sons that were slain, even him and his nurse, [and put them] in the bedchamber; and they hid him from Athaliah, so that he was not slain;
- Bible in Basic English (BBE)
- But Jehosheba, the daughter of King Joram, sister of Ahaziah, secretly took Joash, the son of Ahaziah, with the woman who took care of him, away from among the king's sons who were put to death, and put him in the bedroom; and they kept him safe from Athaliah, so that he was not put to death.
- Darby Translation (DBY)
- But Jehosheba, the daughter of king Joram, the sister of Ahaziah, took Joash the son of Ahaziah and stole him from among the king's sons that were slain, [and hid] him and his nurse in the bedchamber; and they hid him from Athaliah, so that he was not slain.
- Webster's Bible (WBS)
- But Jehosheba, the daughter of king Joram, sister of Ahaziah, took Joash the the son of Ahaziah, and stole him from among the king's sons [who were] slain; and they hid him, [even] him and his nurse, in the bed-chamber, from Athaliah, so that he was not slain.
- Young's Literal Translation (YLT)
- and Jehosheba daughter of king Joram, sister of Ahaziah, taketh Joash son of Ahaziah, and stealeth him out of the midst of the sons of the king who are put to death, him and his nurse, in the inner part of the bed-chambers, and they hide him from the presence of Athaliah, and he hath not been put to death,
Read in context
- 1அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர்யாவரையும் சங்காரம்பண்ணினாள்.
- 2யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிறராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளிஅறையில் ஒளித்துவைத்தார்கள்.
- 3இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.
- 4ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக்கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,
Cross references
- 1 Kings 6:8 1 இராஜாக்கள் 6:8நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
- Isaiah 65:8–9 ஏசாயா 65:8–9கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன். யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள்.
- 2 Kings 8:16 2 இராஜாக்கள் 8:16இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில், யோசபாத்தின் குமாரனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத்துவக்கினான்.
- 2 Chronicles 22:11 2 நாளாகமம் 22:11ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்றுபோடப்படுகிறராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகியயோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள்; அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்.
- Jeremiah 33:21 எரேமியா 33:21அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என்ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.
- Jeremiah 33:26 எரேமியா 33:26அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
- 1 Kings 6:10 1 இராஜாக்கள் 6:10அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.
- Proverbs 21:30 நீதிமொழிகள் 21:30கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
- Isaiah 37:35 ஏசாயா 37:35என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
- Jeremiah 35:2 எரேமியா 35:2நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுஎன்றார்.
- Ezekiel 40:45 எசேக்கியேல் 40:45பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.
- Isaiah 7:6–7 ஏசாயா 7:6–7நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம். கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை;
Original words (Hebrew)
- Jehosheba · H3089יְהוֹשֶׁבַע Yᵉhôwshebaʻ
- daughter · H1323בַּת bath
- king · H4428מֶלֶךְ melek
- Joram · H3141יוֹרָם Yôwrâm
- sister · H269אָחוֹת ʼâchôwth
- Ahaziah · H274אֲחַזְיָה ʼĂchazyâh
- took · H3947לָקַח lâqach
- Joash · H3101יוֹאָשׁ Yôwʼâsh
- son · H1121בֵּן bên
- Ahaziah · H274אֲחַזְיָה ʼĂchazyâh
- stole · H1589גָּנַב gânab
- among · H8432תָּוֶךְ tâvek
- king’s · H4428מֶלֶךְ melek
- sons · H1121בֵּן bên
- slain · H4191מוּת mûwth
- hid · H5641סָתַר çâthar
- nurse · H3243יָנַק yânaq
- bedchamber · H2315חֶדֶר cheder
- from · H6440פָּנִים pânîym
- Athaliah · H6271עֲתַלְיָה ʻĂthalyâh
- slain · H4191מוּת mûwth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.