2 Kings 19:37 in Tamil
அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.
Avan than thaevanaagiya nisrogin kovililae paninthugollugirabothu, avan kumaararaagiya athramalaekkum saraethsaerum avanaip pattayaththinaal vettippottu, aararaath thaesaththirkuth thappi odipponaarkal; avan kumaaranaagiya esaraththon avan pattaththirku vanthu arasaandaan.
2 Kings 19:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவனுடைய மகன்களாகிய அத்ரமலேக்கும், சரேத்சேரும் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவனுடைய மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து ஆட்சிசெய்தான்.
- Open Tamil Contemporary Version
- ஒரு நாள், அவன் தனது தெய்வமான நிஸ்ரோக்கின் கோயிலில் வணங்கும்போது, அவனுடைய மகன்களான அத்ரமேலேக்கும், சரெத்செரும் அவனை வாளினால் கொலைசெய்துவிட்டு, அரராத் நாட்டிற்குத் தப்பியோடினார்கள். அவனுடைய மகன் எசரத்தோன் அவனுக்குப்பின் அரசனானான்.
- Tamil Easy Reading Version
- ஒரு நாள் சனகெரிப் தனது தெய்வமான நிஸ்ரோகின், ஆலயத்தில் தொழுகை செய்துக்கொண்டிருந்தான். அப்போது அவனை அவனது மகன்களான அத்ரமலேக் என்பவனும் சரேத்சேர் என்பவனும் சேர்ந்து வாளால் கொன்றனர். பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஆரராத் நாட்டிற்கு ஓடினார்கள். சனகெரிப்பிற்குப் பிறகு அவனது மகன் எசரத்தோன் என்பவன் புதிய அரசன் ஆனான்.
2 Kings 19:37 in English
- King James Version (KJV)
- And it came to pass, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer his sons smote him with the sword: and they escaped into the land of Armenia. And Esar-haddon his son reigned in his stead.
- World English Bible (WEB)
- As he was worshiping in the house of Nisroch his god, Adrammelech and Sharezer struck him with the sword; and they escaped into the land of Ararat. Esar Haddon his son reigned in his place.
- American Standard Version (ASV)
- And it came to pass, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer smote him with the sword: and they escaped into the land of Ararat. And Esar-haddon his son reigned in his stead.
- Bible in Basic English (BBE)
- And it came about, when he was worshipping in the house of Nisroch his god, that his sons Adrammelech and Sharezer put him to death with the sword; and they went in flight into the land of Ararat. And Esar-haddon his son became king in his place.
- Darby Translation (DBY)
- And it came to pass, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer [his sons] smote him with the sword; and they escaped into the land of Ararat. And Esarhaddon his son reigned in his stead.
- Webster's Bible (WBS)
- And it came to pass, as he was worshiping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer his sons smote him with the sword: and they escaped into the land of Armenia. And Esar-haddon his son reigned in his stead.
- Young's Literal Translation (YLT)
- and it cometh to pass, he is bowing himself in the house of Nisroch his god, and Adramelech and Sharezar [his sons] have smitten him with the sword, and they have escaped to the land of Ararat, and Esar-Haddon his son reigneth in his stead.
Read in context
- 35அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.
- 36அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான்.
- 37அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.
Cross references
- Genesis 8:4 ஆதியாகமம் 8:4ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலேபேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
- Ezra 4:2 எஸ்றா 4:2அவர்கள் செருபாபேலிடத்துக்கும்தலைவரான பிதாக்களிடத்துக்கும்வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள்.
- 2 Kings 19:7 2 இராஜாக்கள் 19:7இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
- Jeremiah 51:27 எரேமியா 51:27தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரக்கூப்பிடுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.
- 2 Chronicles 32:19 2 நாளாகமம் 32:19மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.
- Isaiah 37:37–38 ஏசாயா 37:37–38அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத்திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான். அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.
- 2 Chronicles 32:21 2 நாளாகமம் 32:21அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
- 2 Kings 19:10 2 இராஜாக்கள் 19:10நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.
- Deuteronomy 32:31 உபாகமம் 32:31தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடையசத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.
- 2 Kings 18:5 2 இராஜாக்கள் 18:5அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த் தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.
- 2 Kings 18:30 2 இராஜாக்கள் 18:30கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.
- 2 Chronicles 32:14 2 நாளாகமம் 32:14உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்?
Original words (Hebrew)
- worshipping · H7812שָׁחָה shâchâh
- house · H1004בַּיִת bayith
- Nisroch · H5268נִסְרֹךְ Niçrôk
- god · H430אֱלֹהִים ʼĕlôhîym
- Adrammelech · H152אֲדְרַמֶּלֶךְ ʼĂdrammelek
- Sharezer · H8272שַׁרְאֶצֶר Sharʼetser
- sons · H1121בֵּן bên
- smote · H5221נָכָה nâkâh
- sword · H2719חֶרֶב chereb
- escaped · H4422מָלַט mâlaṭ
- land · H776אֶרֶץ ʼerets
- Armenia · H780אֲרָרַט ʼĂrâraṭ
- Esar-haddon · H634אֵסַר־חַדּוֹן ʼÊçar-Chaddôwn
- son · H1121בֵּן bên
- reigned · H4427מָלַךְ mâlak
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.