2 Kings 7:13 in Tamil
அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.
Avan oozhiyakkaararil oruvan pirathiyuththaramaaga: ingae meethiyaana kuthiraigalil ainthu kuthiraigalaik konduboga uththaravu kodum; itho, ingae meethiyaana isravaelin sagala aeraalaththilum, maandubona isravaelin sagala koottaththilum, avaigal maaththiram meenthirukkirathu; avaigalai naam anuppippaarppom endraan.
2 Kings 7:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்திரவு கொடும்; இதோ, இங்கே இஸ்ரவேலின் சகல மிகுதியிலும், இறந்துபோன இஸ்ரவேலின் அனைத்து கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீதியாக இருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அரசனுடைய அதிகாரிகளில் ஒருவன் அதற்குப் பதிலாக, “நகரத்தில் மீதியாயுள்ள ஐந்து குதிரைகளையும் சிலர் எடுத்துக்கொண்டு அங்கே போகட்டும். அவர்கள் இறந்தாலும் என்ன? இங்கிருந்து மீந்திருக்கும் இஸ்ரயேலருக்கு நடப்பது தான் அவர்களுக்கும் நடக்கும். ஆகவே என்ன நடந்ததென்பதை அறிந்துவரும்படி நாம் அவர்களை அனுப்புவோம்” என்றான்.
- Tamil Easy Reading Version
- ஒரு அதிகாரியோ, “சிலர் 5 குதிரைகளைக் கொண்டுபோக அனுமதி வழங்குங்கள். அவை எப்படியாவது இங்கு மரித்துப் போகும். இவை ஜனங்களைப் போலவே பட்டினியாக உள்ளன. அவற்றை அனுப்பிப் பார்ப்போம்” என்றான்.
2 Kings 7:13 in English
- King James Version (KJV)
- And one of his servants answered and said, Let [some] take, I pray thee, five of the horses that remain, which are left in the city, (behold, they [are] as all the multitude of Israel that are left in it: behold, [I say], they [are] even as all the multitude of the Israelites that are consumed:) and let us send and see.
- World English Bible (WEB)
- One of his servants answered, “Please let some people take five of the horses that remain, which are left in the city. Behold, they are like all the multitude of Israel who are left in it. Behold, they are like all the multitude of Israel who are consumed. Let’s send and see.”
- American Standard Version (ASV)
- And one of his servants answered and said, Let some take, I pray thee, five of the horses that remain, which are left in the city (behold, they are as all the multitude of Israel that are left in it; behold, they are as all the multitude of Israel that are consumed); and let us send and see.
- Bible in Basic English (BBE)
- And one of his servants said in answer, Send men and let them take five of the horses which we still have in the town; if they keep their lives they will be the same as those of Israel who are still living here; if they come to their death they will be the same as all those of Israel who have gone to destruction: let us send and see.
- Darby Translation (DBY)
- And one of his servants answered and said, Let some one take, I pray thee, five of the horses that remain, which are left in the city (behold, they are as all the multitude of Israel that are left in it: behold, they are even as all the multitude of the Israelites that have perished), and let us send and see.
- Webster's Bible (WBS)
- And one of his servants answered and said, Let [some] take, I pray thee, five of the horses that remain, which are left in the city, (behold, they [are] as all the multitude of Israel that are left in it: behold, [I say] , they [are] even as all the multitude of the Israelites that are consumed:) and let us send and see.
- Young's Literal Translation (YLT)
- And one of his servants answereth and saith, 'Then let them take, I pray thee, five of the horses that are left, that have been left in it — lo, they [are] as all the multitude of Israel who have been left in it; lo, they are as all the multitude of Israel who have been consumed — and we send and see.'
Read in context
- 11அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள்.
- 12அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான்.
- 13அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.
- 14அப்படியே இரண்டு இரதக் குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்துபோகும்படி அனுப்பினான்.
- 15அவர்கள் யோர்தான்மட்டும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்துபோட்ட வஸ்திரங்களாலும் தட்டுமுட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.
Cross references
- 2 Kings 6:33 2 இராஜாக்கள் 6:33அவர்களோடே அவன் பேசிக் கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்புக் கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
- 2 Kings 7:4 2 இராஜாக்கள் 7:4பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,
- Lamentations 4:9 புலம்பல் 4:9பசியினால் கொலையுண்டவர்களைப்பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால்குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.
- Jeremiah 14:18 எரேமியா 14:18நான் வெளியே போனால், இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால் இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள்; தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்கள் என்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.
- 2 Kings 5:13 2 இராஜாக்கள் 5:13அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.
Original words (Hebrew)
- one · H259אֶחָד ʼechâd
- servants · H5650עֶבֶד ʻebed
- answered · H6030עָנָה ʻânâh
- said · H559אָמַר ʼâmar
- take · H3947לָקַח lâqach
- five · H2568חָמֵשׁ châmêsh
- horses · H5483סוּס çûwç
- remain · H7604שָׁאַר shâʼar
- left · H7604שָׁאַר shâʼar
- multitude · H1995הָמוֹן hâmôwn
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- left · H7604שָׁאַר shâʼar
- multitude · H1995הָמוֹן hâmôwn
- Israelites · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- consumed · H8552תָּמַם tâmam
- send · H7971שָׁלַח shâlach
- see · H7200רָאָה râʼâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.