2 Samuel 17:18 in Tamil
ஒரு பிள்ளையாண்டான் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாய்ப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனுஷன் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
Oru pillaiyaandaan avarkalaik kandu, apsalomukku ariviththaan; aagaiyaal avarkal iruvarum seekkiramaayp poy, pagoorimilirukkira oru manushan veettirkul piravaesiththaarkal; avan mutraththil oru kinaru irunthathu; athil iranginaarkal.
2 Samuel 17:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு வாலிபன் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாகப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தார்கள்; அவனுடைய முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் அவர்களை ஒரு வாலிபன் கண்டு அதை அப்சலோமுக்குப் போய்ச் சொன்னான். உடனே அவர்கள் இருவரும் அவ்விடத்தைவிட்டு புறப்பட்டு பகூரிமிலுள்ள ஒரு மனிதனுடைய வீட்டிற்குப் போனார்கள். அவன் வீட்டின் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. அதற்குள் அவர்கள் இறங்கினார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால் ஒரு சிறுவன் யோனத்தானையும் அகிமாசையும் பார்த்துவிட்டான். அவன் அதைச் சொல்வதற்கு அப்சலோமிடம் ஓடினான். யோனத்தானும் அகிமாசும் விரைவாக ஓடிவிட்டார்கள். அவர்கள் பகூரிமில் உள்ள ஒரு மனிதனின் வீட்டை அடைந்தனர். அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. யோனத்தானும் அகிமாசும் கிணற்றினுள் இறங்கினார்கள்.
2 Samuel 17:18 in English
- King James Version (KJV)
- Nevertheless a lad saw them, and told Absalom: but they went both of them away quickly, and came to a man’s house in Bahurim, which had a well in his court; whither they went down.
- World English Bible (WEB)
- But a boy saw them, and told Absalom. Then they both went away quickly and came to the house of a man in Bahurim, who had a well in his court; and they went down there.
- American Standard Version (ASV)
- But a lad saw them, and told Absalom: and they went both of them away quickly, and came to the house of a man in Bahurim, who had a well in his court; and they went down thither.
- Bible in Basic English (BBE)
- But a boy saw them, and gave word of it to Absalom: so the two of them went away quickly, and came to the house of a man in Bahurim who had a water-hole in his garden, and they went down into it.
- Darby Translation (DBY)
- But a lad saw them, and told Absalom. Then they went both of them away quickly, and came to the house of a man at Bahurim, who had a well in his court; and they went down there.
- Webster's Bible (WBS)
- Nevertheless, a lad saw them, and told Absalom: but they went both of them away quickly, and came to the house of a man in Bahurim, who had a well in his court; into which they descended.
- Young's Literal Translation (YLT)
- And a youth seeth them, and declareth to Absalom; and they go on both of them hastily, and come in unto the house of a man in Bahurim, and he hath a well in his court, and they go down there,
Read in context
- 16இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாய்த் தாவீதுக்கு அறிவிக்கும்படிக்குச் செய்தி அனுப்பி: நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளிலே தங்கவேண்டாம்; ராஜாவும் அவரோடிருக்கிற சகல ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்குத் தாமதம் இல்லாமல் அக்கரைப்படவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.
- 17யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால்காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.
- 18ஒரு பிள்ளையாண்டான் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாய்ப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனுஷன் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
- 19வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு, அதின்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள்.
- 20அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடிக் காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
Cross references
- 2 Samuel 3:16 2 சாமுவேல் 3:16அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டுவந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
- 2 Samuel 16:5 2 சாமுவேல் 16:5தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத் தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
- 2 Samuel 19:16 2 சாமுவேல் 19:16பகூரீம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான்.
Original words (Hebrew)
- lad · H5288נַעַר naʻar
- saw · H7200רָאָה râʼâh
- told · H5046נָגַד nâgad
- Absalom · H53אֲבִישָׁלוֹם ʼĂbîyshâlôwm
- went · H3212יָלַךְ yâlak
- both · H8147שְׁנַיִם shᵉnayim
- quickly · H4120מְהֵרָה mᵉhêrâh
- came · H935בּוֹא bôwʼ
- man’s · H376אִישׁ ʼîysh
- house · H1004בַּיִת bayith
- Bahurim · H980בַּחֻרִים Bachurîym
- well · H875בְּאֵר bᵉʼêr
- court · H2691חָצֵר châtsêr
- whither · H8033שָׁם shâm
- down · H3381יָרַד yârad
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.