Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 24:13 in Tamil

அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.

Appadiyae kaath thaaveethinidaththil vanthu, avanai nokki: ummudaiya thaesaththilae aezhu varusham panjsam varavaendumo? allathu moondrumaatham ummudaiya saththurukkal ummaip pinthodara, neer avarkalukku munpaaga odippogavaendumo? allathu ummudaiya thaesaththilae moondrunaal kollainoy undaagavaendumo? ippothum ennai anuppinavarukku naan enna maruuththaravu kondubogavaendum enpathai neer yosiththuppaarum endru sonnaan.

Download verse image

2 Samuel 24:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருடங்கள் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதங்கள் உம்முடைய எதிரிகள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் உண்டாக வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப் பாரும் என்று சொன்னான்.
Open Tamil Contemporary Version
எனவே காத் தாவீதிடம்போய், “உம்முடைய நாட்டில் ஏழு வருடங்கள் பஞ்சம் வருவதா? அல்லது பகைவர் உம்மைப் பின்தொடர மூன்று மாதங்கள் நீர் அவர்களுக்கு ஒளிந்து ஓடுவதா? அல்லது உமது தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் வருவதா? எது என யோசனை செய்து, நான் இறைவனிடம் என்ன சொல்லவேண்டுமென உமது தீர்மானத்தை உடனே சொல்லும்” என்றான்.
Tamil Easy Reading Version
காத் தாவீதிடம், போய் அவ்வாறே கூறினான். அவன் தாவீதிடம், “இம்மூன்று காரியங்களிலும் ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் இத்தேசத்திற்கும் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரவேண்டுமா? மூன்று மாதங்கள் உங்கள் பகைவர்கள் உங்களைத் துரத்தவேண்டுமா? அல்லது மூன்று நாட்கள் உங்கள் தேசத்தாரை நோய் பாதிக்கட்டுமா? இதைக் குறித்து யோசித்துப் பாருங்கள், இவற்றில் எதை முடிவு செய்கிறீர்கள் என்பதை நான் என்னை அனுப்பிய கர்த்தருக்குக் கூற வேண்டும்” என்றான்.

2 Samuel 24:13 in English

King James Version (KJV)
So Gad came to David, and told him, and said unto him, Shall seven years of famine come unto thee in thy land? or wilt thou flee three months before thine enemies, while they pursue thee? or that there be three days’ pestilence in thy land? now advise, and see what answer I shall return to him that sent me.
World English Bible (WEB)
So Gad came to David, and told him, saying, “Shall seven years of famine come to you in your land? Or will you flee three months before your foes while they pursue you? Or shall there be three days’ pestilence in your land? Now answer, and consider what answer I shall return to him who sent me.”
American Standard Version (ASV)
So Gad came to David, and told him, and said unto him, Shall seven years of famine come unto thee in thy land? or wilt thou flee three months before thy foes while they pursue thee? or shall there be three days’ pestilence in thy land? now advise thee, and consider what answer I shall return to him that sent me.
Bible in Basic English (BBE)
So Gad came to David, and gave him word of this and said to him, Are there to be three years when there is not enough food in your land? or will you go in flight from your haters for three months, while they go after you? or will you have three days of violent disease in your land? take thought and say what answer I am to give to him who sent me.
Darby Translation (DBY)
And Gad came to David, and told him, and said to him, Shall seven years of famine come to thee in thy land? or wilt thou flee three months before thine adversaries while they pursue thee? or shall there be three days' pestilence in thy land? Now be aware and consider what word I shall bring again to him that sent me.
Webster's Bible (WBS)
So Gad came to David, and told him, and said to him, Shall seven years of famine come upon thee in thy land? or wilt thou flee three months before thy enemies, while they pursue thee? or that there be three days' pestilence in thy land? Now consider, and see what answer I shall return to him that sent me.
Young's Literal Translation (YLT)
And Gad cometh in unto David, and declareth to him, and saith to him, 'Do seven years of famine come in to thee in thy land? or three months art thou fleeing before thine adversary — and he pursuing thee? or are three days' pestilence in thy land? now, know and see what word I take back to Him sending me.'

Read in context

  1. 11தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
  2. 12நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
  3. 13அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.
  4. 14அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
  5. 15அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.
Read all of 2 Samuel 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.