2 Samuel 24:20 in Tamil
அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி,
Arvanaa aerittuppaarththu: raajaavum avanudaiya oozhiyakkaararum thannidaththil varugirathaikkandu, arvanaa ethirkonduboyth tharaimattum kuninthu raajaavai vanangi,
2 Samuel 24:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அர்வனா பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரர்களும் தன்னிடம் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைவரைக்கும் குனிந்து ராஜாவை வணங்கி,
- Open Tamil Contemporary Version
- தாவீதும் அவனுடைய மனிதரும் தன்னிடம் வருவதைக் கண்டபோது, அர்வனா அவர்களுக்கு எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து அரசனை வணங்கினான்.
- Tamil Easy Reading Version
- அரசனான தாவீதும் அவனது அதிகாரிகளும் தன்னிடம் வருவதை அர்வனா பார்த்தார். அர்வனா நிலத்தில் தலைதாழ்த்தி வணங்கினார்.
2 Samuel 24:20 in English
- King James Version (KJV)
- And Araunah looked, and saw the king and his servants coming on toward him: and Araunah went out, and bowed himself before the king on his face upon the ground.
- World English Bible (WEB)
- Araunah looked out, and saw the king and his servants coming on toward him. Then Araunah went out and bowed himself before the king with his face to the ground.
- American Standard Version (ASV)
- And Araunah looked forth, and saw the king and his servants coming on toward him: and Araunah went out, and bowed himself before the king with his face to the ground.
- Bible in Basic English (BBE)
- And Araunah, looking out, saw the king and his servants coming to him: and Araunah went out, and went down on his face to the earth before the king.
- Darby Translation (DBY)
- And Araunah looked, and saw the king and his servants coming on towards him; and Araunah went out, and bowed himself before the king with his face to the ground.
- Webster's Bible (WBS)
- And Araunah looked, and saw the king and his servants coming towards him: And Araunah went out, and bowed himself before the king on his face upon the ground.
- Young's Literal Translation (YLT)
- And Araunah looketh, and seeth the king and his servants passing over unto him, and Araunah goeth out and boweth himself to the king — his face to the earth.
Read in context
- 18அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
- 19காத்துடைய வார்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.
- 20அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி,
- 21ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ள வந்தேன் என்றான்.
- 22அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்கு போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,
Cross references
- 1 Chronicles 21:20–21 1 நாளாகமம் 21:20–21ஒர்னான் திரும்பிப்பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான். தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது, ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்.
- Ruth 2:10 ரூத் 2:10அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.
- 2 Samuel 9:8 2 சாமுவேல் 9:8அப்பொழுது அவன் வணங்கி: செத்தநாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.
- Genesis 18:2 ஆதியாகமம் 18:2தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து:
Original words (Hebrew)
- Araunah · H728אֲרַוְנָה ʼĂravnâh
- looked · H8259שָׁקַף shâqaph
- saw · H7200רָאָה râʼâh
- king · H4428מֶלֶךְ melek
- servants · H5650עֶבֶד ʻebed
- on · H5674עָבַר ʻâbar
- Araunah · H728אֲרַוְנָה ʼĂravnâh
- out · H3318יָצָא yâtsâʼ
- bowed · H7812שָׁחָה shâchâh
- king · H4428מֶלֶךְ melek
- face · H639אַף ʼaph
- ground · H776אֶרֶץ ʼerets
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.