2 Samuel 9:5 in Tamil
அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.
Appozhuthu thaaveethuraajaa avanai lothaebaarilirukkira ammiyaelin kumaaranaagiya maageerin veettilirunthu azhaippiththaan.
2 Samuel 9:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.
- Open Tamil Contemporary Version
- எனவே தாவீது அரசன், அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை லோதேபாரிலிருந்து கொண்டுவரச் செய்தான்.
- Tamil Easy Reading Version
- தாவீது அரசன் பணியாட்களை லோதேபாரிலுள்ள அம்மியேலின் மகனாகிய மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை அங்கிருந்து அழைத்து வருவதற்காக அனுப்பினான்
2 Samuel 9:5 in English
- King James Version (KJV)
- Then king David sent, and fetched him out of the house of Machir, the son of Ammiel, from Lo-debar.
- World English Bible (WEB)
- Then King David sent and brought him out of the house of Machir the son of Ammiel, from Lo Debar.
- American Standard Version (ASV)
- Then king David sent, and fetched him out of the house of Machir the son of Ammiel, from Lo-debar.
- Bible in Basic English (BBE)
- Then King David sent, and had him taken from Lo-debar, from the house of Machir, the son of Ammiel.
- Darby Translation (DBY)
- And king David sent, and fetched him out of the house of Machir the son of Ammiel, from Lodebar.
- Webster's Bible (WBS)
- Then king David sent, and brought him from the house of Machir, the son of Ammiel, from Lo-debar.
- Young's Literal Translation (YLT)
- And king David sendeth, and taketh him out of the house of Machir son of Ammiel, of Lo-Debar,
Read in context
- 3அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத்தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.
- 4அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
- 5அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.
- 6சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
- 7தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.