Acts 19:24 in Tamil
எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொளிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
Eppadiyendraal, themaeththiriyu ennum paerkonda oru thattaan thiyaanaalin kovilaippola velliyinaal siriya kovilkalais seythu, tholilaaligalukku miguntha aathaayam varuviththukkondirunthaan.
Acts 19:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பெயர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- தெமேத்திரியு என்னும் பெயருள்ள ஒரு தட்டான் இருந்தான். அவன் அர்த்தமிஸ் தேவதையின் கோவிலை வெள்ளியினால் வடிவமைத்து, அந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கு நல்ல வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான்.
- Tamil Easy Reading Version
- தெமெத்திரியு என்னும் பெயர் கொண்ட மனிதன் ஒருவன் இருந்தான். அவன் வெள்ளி வேலை செய்பவனாக இருந்தான். ஆர்தமிஸ் தேவதையின் தேவாலயத்தைப் போன்று தோற்றமளித்த வெள்ளியாலான சிறிய மாதிரி தேவாலயங்களை அவன் செய்து வந்தான். இவ்வேலையைச் செய்தவர்கள் மிகுந்த பணம் சம்பாதித்தார்கள்.
Acts 19:24 in English
- King James Version (KJV)
- For a certain [man] named Demetrius, a silversmith, which made silver shrines for Diana, brought no small gain unto the craftsmen;
- World English Bible (WEB)
- For a certain man named Demetrius, a silversmith who made silver shrines of Artemis, brought no little business to the craftsmen,
- American Standard Version (ASV)
- For a certain man named Demetrius, a silversmith, who made silver shrines of Diana, brought no little business unto the craftsmen;
- Bible in Basic English (BBE)
- For there was a certain man named Demetrius, a silver-worker, who made silver boxes for the images of Diana, and gave no small profit to the workmen;
- Darby Translation (DBY)
- For a certain [man] by name Demetrius, a silver-beater, making silver temples of Artemis, brought no small gain to the artisans;
- Webster's Bible (WBS)
- For a certain [man] named Demetrius, a silver-smith, who made silver shrines for Diana, brought no small gain to the artificers;
- Young's Literal Translation (YLT)
- for a certain one, Demetrius by name, a worker in silver, making silver sanctuaries of Artemis, was bringing to the artificers gain not a little,
Read in context
- 22தனக்கு உதவிசெய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் ஏரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னுஞ் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான்.
- 23அக்காலத்திலே இந்த மார்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று.
- 24எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொளிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
- 25இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.
- 26இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.
Cross references
- 1 Timothy 6:9–10 1 தீமோத்தேயு 6:9–10ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- Acts 16:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
- Acts 19:27–28 அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:27–28இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதவாயிருக்கிறது என்றான். அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள்.
- Acts 19:34–35 அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:34–35அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணிநேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். பட்டணத்துச் சம்பிரதியானவன்ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகியதியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்தசிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
- Acts 16:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:19அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.
- Isaiah 56:11–12 ஏசாயா 56:11–12திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான். வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.
Original words (Greek)
- For · G1063γάρ gár
- certain · G5100τὶς tìs
- named · G3686ὄνομα ónoma
- Demetrius · G1216Δημήτριος Dēmḗtrios
- silversmith · G695ἀργυροκόπος argyrokópos
- made · G4160ποιέω poiéō
- silver · G693ἀργύρεος argýreos
- shrines · G3485ναός naós
- Diana · G735Ἄρτεμις Ártemis
- brought · G3930παρέχω paréchō
- no · G3756οὐ ou
- small · G3641ὀλίγος olígos
- gain · G2039ἐργασία ergasía
- craftsmen · G5079τεχνίτης technítēs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.