Acts 22:23 in Tamil
இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,
Ivvithamaay avarkal kookkuralittuth thangal maelvasthirangalai erinthuvittu, aagaayaththilae puzhuthiyaith thootrikkondirukkaiyil,
Acts 22:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவ்விதமாக அவர்கள் கூக்குரலிட்டுத் தங்களுடைய மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கும்போது,
- Open Tamil Contemporary Version
- அவர்கள் சத்தமிட்டுக்கொண்டு தங்கள் உடைகளைக் கழற்றி எறிந்தார்கள். புழுதியை அள்ளி மேலே வீசினார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அங்கிகளைக் கழற்றி வீசினர். அவர்கள் புழுதியை அள்ளி வானத்தில் வீசினர்.
Acts 22:23 in English
- King James Version (KJV)
- And as they cried out, and cast off [their] clothes, and threw dust into the air,
- World English Bible (WEB)
- As they cried out, threw off their cloaks, and threw dust into the air,
- American Standard Version (ASV)
- And as they cried out, and threw off their garments, and cast dust into the air,
- Bible in Basic English (BBE)
- And while they were crying out, and pulling off their clothing, and sending dust into the air,
- Darby Translation (DBY)
- And as they were crying, and throwing away their clothes, and casting dust into the air,
- Webster's Bible (WBS)
- And as they cried out, and cast off [their] clothes, and threw dust into the air,
- Young's Literal Translation (YLT)
- And they crying out and casting up their garments, and throwing dust into the air,
Read in context
- 21அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாயப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
- 22இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனைப் பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
- 23இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,
- 24சேனாபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.
- 25அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டுப்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப் படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.
Cross references
- 2 Samuel 16:13 2 சாமுவேல் 16:13அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
- Acts 26:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:11சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியபட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
- Acts 7:53 அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:53தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.
- Acts 7:58 அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58அவனை நகரத்தக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடையபாதத்தினருகே வைத்தார்கள்.
- Ecclesiastes 10:3 பிரசங்கி 10:3மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.