Acts 27:3 in Tamil
மறுநாள் சீதோன் துறைபிடித்தோம். யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.
Marunaal seethon thuraibidiththom. yooliyu pavulaip patchamaay nadappiththu, avan than sinaegitharidaththilae poyp paraamarippadaiyumbadikku uththaravu koduththaan.
Acts 27:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மறுநாள் சீதோன் துறைமுகம் வந்துசேர்ந்தோம். யூலியு பவுலை அன்பாக நடப்பித்து, அவன் தன் நண்பர்களிடத்திலே போய் உபசரிக்கப்படும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- மறுநாள் நாங்கள் சீதோன் துறைமுகத்தில் இறங்கினோம். யூலியு, பவுலின்மேல் தயவு காண்பித்தான். அதனால் பவுல் தன் சிநேகிதர்களிடம் போய்ப் பராமரிக்கப்படவும், உதவி பெற்றுக்கொள்ளவும், அவன் அனுமதித்தான்.
- Tamil Easy Reading Version
- மறுநாள் நாங்கள் சீதோன் நகரத்திற்கு வந்தோம். ஜூலியஸ் பவுலோடு நல்ல முறையில் நடந்துகொண்டான். அவன், பவுல் அவனது நண்பர்களைச் சென்று சந்திக்கும் சுதந்திரத்தை அவனுக்குக் கொடுத்தான். இந்த நண்பர்கள் பவுலுக்குரிய தேவைகளைக் கவனித்து வந்தனர்.
Acts 27:3 in English
- King James Version (KJV)
- And the next [day] we touched at Sidon. And Julius courteously entreated Paul, and gave [him] liberty to go unto his friends to refresh himself.
- World English Bible (WEB)
- The next day, we touched at Sidon. Julius treated Paul kindly and gave him permission to go to his friends and refresh himself.
- American Standard Version (ASV)
- And the next day we touched at Sidon: and Julius treated Paul kindly, and gave him leave to go unto his friends and refresh himself.
- Bible in Basic English (BBE)
- And on the day after, we came to Sidon; and Julius was kind to Paul, and let him go to see his friends and take a rest.
- Darby Translation (DBY)
- And the next day we arrived at Sidon. And Julius treated Paul kindly and suffered him to go to his friends and refresh himself.
- Webster's Bible (WBS)
- And the next [day] we touched at Sidon. And Julius courteously treated Paul, and gave [him] liberty to go to his friends to refresh himself.
- Young's Literal Translation (YLT)
- on the next [day] also we touched at Sidon, and Julius, courteously treating Paul, did permit [him], having gone on unto friends, to receive [their] care.
Read in context
- 1நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப் போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்துபட்டாளத்தைச்சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்.
- 2அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாஙக்ள் ஏறி, ஆசியா நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான்.
- 3மறுநாள் சீதோன் துறைபிடித்தோம். யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.
- 4அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் ஒதுக்கிலே ஓடினோம்.
- 5பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம்.
Cross references
- Acts 24:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:23பவுலைக் காவல்பண்ணவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக் கண்டு கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூற்றுக்கு அதிபதியானவனுக்குக் கட்டளையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படிசெய்தான்.
- Acts 28:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:16நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனேதனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
- Acts 27:43 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:43நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும்,
- Genesis 10:15 ஆதியாகமம் 10:15கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
- Acts 27:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப் போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்துபட்டாளத்தைச்சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்.
- Zechariah 9:2 சகரியா 9:2ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதன் எல்லைக்குள்ளாயிருக்கும்.
- Matthew 11:21 மத்தேயு 11:21கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
- Isaiah 23:2–4 ஏசாயா 23:2–4தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி உன்னை நிரப்பினார்கள். சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது. சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெறுகிறதும் இல்லை; இளைஞரைவளர்க்கிறதும் இல்லை; கன்னிகைகளை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்லுகிறது.
- Acts 12:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:20அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து; ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
- Isaiah 23:12 ஏசாயா 23:12ஒடுங்குண்ட கன்னியாகிய சீதோன் குமாரத்தியே, இனிக் களிகூர்ந்துகொண்டிராய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.
- Genesis 49:13 ஆதியாகமம் 49:13செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும்.
Original words (Greek)
- And · G5037τέ té
- next · G2087ἕτερος héteros
- touched · G2609κατάγω katágō
- at · G1519εἰς eis
- Sidon · G4605Σιδών Sidṓn
- And · G5037τέ té
- Julius · G2457Ἰούλιος Ioúlios
- courteously · G5364φιλανθρώπως philanthrṓpōs
- entreated · G5530χράομαι chráomai
- Paul · G3972Παῦλος Paûlos
- gave · G2010ἐπιτρέπω epitrépō
- liberty · G2010ἐπιτρέπω epitrépō
- go · G4198πορεύομαι poreúomai
- unto · G4314πρός prós
- friends · G5384φίλος phílos
- himself · G5177τυγχάνω tynchánō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.