Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 3:16 in Tamil

அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.

Avarudaiya naamaththaippatrum visuvaasaththinaalae avarudaiya naamamae neengal paarththu arinthirukkira ivanaip pelappaduththinathu; avaraal undaagiya visuvaasamae ungalellaarukkum munpaaga, inthas sarvaanga sugaththai ivanukkuk koduththathu.

Acts 3:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய நாமத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லோருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்திற்கும் இந்த சுகத்தைக் கொடுத்தது.
Open Tamil Contemporary Version
இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் பார்த்து அறிந்த இவன் பெலனடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும் அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே நீங்கள் அனைவரும் காண்கிறபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.
Tamil Easy Reading Version
“இயேசுவின் வல்லமையே ஊனமுற்ற மனிதனை நன்றாக நடக்கும்படிச் செய்தது. இயேசுவின் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை வைத்ததால் இது நிகழ்ந்தது. நீங்கள் இம்மனிதனைப் பார்க்க முடிகிறது. உங்களுக்கு இவனைத் தெரியும். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையால் அவன் முழுக்கக் குணமடைந்தான். அது நிகழ்ந்ததை நீங்கள் எல்லாரும் கண்டீர்கள்.

Acts 3:16 in English

King James Version (KJV)
And his name through faith in his name hath made this man strong, whom ye see and know: yea, the faith which is by him hath given him this perfect soundness in the presence of you all.
World English Bible (WEB)
By faith in his name, his name has made this man strong, whom you see and know. Yes, the faith which is through him has given him this perfect soundness in the presence of you all.
American Standard Version (ASV)
And by faith in his name hath his name made this man strong, whom ye behold and know: yea, the faith which is through him hath given him this perfect soundness in the presence of you all.
Bible in Basic English (BBE)
And his name, through faith in his name, has made this man strong, whom you see and have knowledge of: yes, the faith which is through him has made him well, before you all.
Darby Translation (DBY)
And, by faith in his name, his name has made this [man] strong whom ye behold and know; and the faith which is by him has given him this complete soundness in the presence of you all.
Webster's Bible (WBS)
And his name, through faith in his name, hath made this man strong, whom ye see and know: yes, the faith which is by him, hath given him this perfect soundness in the presence of you all.
Young's Literal Translation (YLT)
and on the faith of his name, this one whom ye see and have known, his name made strong, even the faith that [is] through him did give to him this perfect soundness before you all.

Read in context

  1. 14பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்றுகேட்டு,
  2. 15ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
  3. 16அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
  4. 17சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.
  5. 18கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.
Read all of Acts 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.