Acts 5:31 in Tamil
இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.
Isravaelukku mananthirumbuthalaiyum paavamannippaiyum arulugiratharkaaga, avarai athibathiyaagavum ratchagaraagavum thamathu valathugaraththinaalae uyarththinaar.
Acts 5:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்.
- Open Tamil Contemporary Version
- இறைவனோ இயேசுவை அதிபதியாகவும், இரட்சகராகவும், தனது வலதுபக்கத்தில் இருக்கும்படி உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும், பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார்.
- Tamil Easy Reading Version
- தேவன் இயேசுவை உயர்த்தித் தனது வலது பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். இயேசுவை எங்கள் தலைவராகவும் இரட்சகராகவும் ஆக்கினார். எல்லா யூதர்களும் தங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக தேவன் இதைச் செய்தார். இப்போது தேவன் அவர்கள் பாவங்களை மன்னிக்க முடியும்.
Acts 5:31 in English
- King James Version (KJV)
- Him hath God exalted with his right hand [to be] a Prince and a Saviour, for to give repentance to Israel, and forgiveness of sins.
- World English Bible (WEB)
- God exalted him with his right hand to be a Prince and a Savior, to give repentance to Israel, and remission of sins.
- American Standard Version (ASV)
- Him did God exalt with his right hand [to be] a Prince and a Saviour, to give repentance to Israel, and remission of sins.
- Bible in Basic English (BBE)
- Him God has put on high at his right hand, as a Ruler and a Saviour, to give to Israel a change of heart and forgiveness of sins.
- Darby Translation (DBY)
- Him has God exalted by his right hand as leader and saviour, to give repentance to Israel and remission of sins.
- Webster's Bible (WBS)
- Him hath God exalted with his right hand [to be] a Prince and a Savior, to give repentance to Israel, and forgiveness of sins.
- Young's Literal Translation (YLT)
- this one God, a Prince and a Saviour, hath exalted with His right hand, to give reformation to Israel, and forgiveness of sins;
Read in context
- 29அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.
- 30நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,
- 31இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.
- 32இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவியும் சாட்சி என்றார்கள்.
- 33அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள்.
Cross references
- Luke 24:47 லூக்கா 24:47அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
- Acts 2:33 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:33அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப்பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
- Hebrews 2:10 எபிரெயர் 2:10ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
- Luke 2:11 லூக்கா 2:11இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
- Acts 11:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:18இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திருப்புதலைதேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
- 1 John 4:14 1 யோவான் 4:14பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
- Revelation 1:5 வெளிப்படுத்தின விசேஷம் 1:5உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
- Titus 3:4–6 தீத்து 3:4–6நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,
- Hebrews 12:2 எபிரெயர் 12:2அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
- Isaiah 9:6 ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
- Acts 3:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:15ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
- Matthew 28:18 மத்தேயு 28:18அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Original words (Greek)
- Him · G5126τοῦτον toûton
- hath · G5312ὑψόω hypsóō
- God · G2316θεός theós
- exalted · G5312ὑψόω hypsóō
- with · G1188δεξιός dexiós
- his · G846αὐτός autós
- hand · G1188δεξιός dexiós
- Prince · G747ἀρχηγός archēgós
- and · G2532καί kaí
- Saviour · G4990σωτήρ sōtḗr
- give · G1325δίδωμι dídōmi
- repentance · G3341μετάνοια metánoia
- Israel · G2474Ἰσραήλ Israḗl
- and · G2532καί kaí
- forgiveness · G859ἄφεσις áphesis
- sins · G266ἁμαρτία hamartía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.