Amos 8:6 in Tamil
நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.
Naangal thavasam virkaththakkathaaga maathappirappum, naangal thaaniyaththin pandasaalaigalaith thirakkaththakkathaaga oyvunaalum eppothu mudiyum endru sollugiravarkalae, ithaik kaelungal.
Amos 8:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாங்கள் கேட்ட கோதுமையை விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் சேமிப்புக்கிடங்குகளை திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.
- Open Tamil Contemporary Version
- ஏழையை வெள்ளி கொடுத்து வாங்குவதற்கும், சிறுமைப்பட்டவர்களை ஒரு ஜோடி செருப்பு கொடுத்து வாங்குவதற்கும், பதரைக் கோதுமையுடன் விற்பதற்கும் அல்லவோ காத்திருக்கிறீர்கள்.
- Tamil Easy Reading Version
- ஏழை ஜனங்களால் தம் கடன்களைச் செலுத்த முடியாது, எனவே நாங்கள் அவர்களை அடிமைகளாக வாங்குவோம். நாங்கள் ஒரு ஜோடி பாதரட்சைக்குரிய பணத்தால் அந்த உதவியற்ற ஜனங்களை வாங்குவோம். ஓ, நாங்கள் நிலத்தில் சிதறிக் கிடக்கிற கோதுமைகளை விற்க முடியும்.”
Amos 8:6 in English
- King James Version (KJV)
- That we may buy the poor for silver, and the needy for a pair of shoes; [yea], and sell the refuse of the wheat?
- World English Bible (WEB)
- that we may buy the poor for silver, and the needy for a pair of sandals, and sell the sweepings with the wheat?’”
- American Standard Version (ASV)
- that we may buy the poor for silver, and the needy for a pair of shoes, and sell the refuse of the wheat?
- Bible in Basic English (BBE)
- Getting the poor for silver, and him who is in need for the price of two shoes, and taking a price for the waste parts of the grain.
- Darby Translation (DBY)
- that we may buy the poor for silver, and the needy for a pair of shoes; and that we may sell the refuse of the wheat.
- Webster's Bible (WBS)
- That we may buy the poor for silver, and the needy for a pair of shoes; and even sell the refuse of the wheat?
- Young's Literal Translation (YLT)
- To purchase with money the poor, And the needy for a pair of sandals, Yea, the refuse of the pure corn we sell.
Read in context
- 4தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி:
- 5நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும் படிக்கும், தானியத்தின் பதரைவிற்கும்படிக்கும்,
- 6நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.
- 7அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.
- 8இதினிமித்தம் தேசம் அதிரவும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ ?
Cross references
- Amos 2:6 ஆமோஸ் 2:6மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப் போட்டார்களே.
- Nehemiah 5:1–5 நெகேமியா 5:1–5ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று. அதென்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள். வேறு சிலர்: எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள். இன்னும் சிலர்: ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்; எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்குநிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும்வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.
- Leviticus 25:39–42 லேவியராகமம் 25:39–42உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம். அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யபூ⟨p⟩லி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன். பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத் தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன். அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.
- Nehemiah 5:8 நெகேமியா 5:8அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.
- Joel 3:3 யோவேல் 3:3அவர்கள் என் ஜனத்தின்பேரில்சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளைவேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண் குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரயமாகக் கொடுத்ததினிமித்தமும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.
- Joel 3:6 யோவேல் 3:6யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்.
- Amos 8:4 ஆமோஸ் 8:4தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.