Daniel 3:26 in Tamil
அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்குவந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
Appozhuthu naebugaathnaechaar erigira akkinichoolaiyin vaasalandaikkuvanthu, unnathamaana thaevanudaiya thaasaraagiya saathraak, maeshaak, aabaethnaego enpavarkalae, neengal veliyae vaarungal endraan; appozhuthu saathraak, maeshaak, aabaethnaego enpavarkal akkiniyin naduvilirunthu veliyae vanthaarkal.
Daniel 3:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற நெருப்புச்சூளையின் வாசலருகில் வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது நேபுகாத்நேச்சார் சுவாலித்து எரிகிற சூளையின் வாயில் அருகே நெருங்கிப்போய், “சாத்ராக்கே, மேஷாக்கே, ஆபேத்நேகோவே, மகா உன்னதமான இறைவனின் அடியவர்களே, உடனே வெளியேறுங்கள்; இங்கே வாருங்கள்” என்று சத்தமிட்டான். அப்படியே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பிறகு நேபுகாத்நேச்சார் அக்கினிச் சூளையின் வாசலருகே சென்று உரத்தகுரலில், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே வெளியே வாருங்கள்! உன்னதமான தேவனுடைய பணியாட்களே, வெளியே வாருங்கள்” என்றான். எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் நெருப்பிலிருந்து வெளியே வந்தனர்.
Daniel 3:26 in English
- King James Version (KJV)
- Then Nebuchadnezzar came near to the mouth of the burning fiery furnace, [and] spake, and said, Shadrach, Meshach, and Abed-nego, ye servants of the most high God, come forth, and come [hither]. Then Shadrach, Meshach, and Abed-nego, came forth of the midst of the fire.
- World English Bible (WEB)
- Then Nebuchadnezzar came near to the mouth of the burning fiery furnace. He spoke and said, “Shadrach, Meshach, and Abednego, you servants of the Most High God, come out, and come here!” Then Shadrach, Meshach, and Abednego came out of the middle of the fire.
- American Standard Version (ASV)
- Then Nebuchadnezzar came near to the mouth of the burning fiery furnace: he spake and said, Shadrach, Meshach, and Abed-nego, ye servants of the Most High God, come forth, and come hither. Then Shadrach, Meshach, and Abed-nego came forth out of the midst of the fire.
- Bible in Basic English (BBE)
- Then Nebuchadnezzar came near the door of the burning and flaming fire: he made answer and said, Shadrach, Meshach, and Abed-nego, you servants of the Most High God, come out and come here. Then Shadrach, Meshach, and Abed-nego came out of the fire.
- Darby Translation (DBY)
- Then Nebuchadnezzar came near to the opening of the burning fiery furnace; he spoke and said, Shadrach, Meshach, and Abed-nego, ye servants of the Most High God, come forth, and come [hither]. Then Shadrach, Meshach, and Abed-nego came forth from the midst of the fire.
- Webster's Bible (WBS)
- Then Nebuchadnezzar came near to the mouth of the burning fiery furnace, [and] spoke, and said, Shadrach, Meshach, and Abed-nego, ye servants of the most high God, come forth, and come [hither] . Then Shadrach, Meshach, and Abed-nego, came forth from the midst of the fire.
- Young's Literal Translation (YLT)
- Then Nebuchadnezzar hath drawn near to the gate of the burning fiery furnace; he hath answered and said, 'Shadrach, Meshach, and Abed-Nego, servants of God Most High come forth, yea, come;' then come forth do Shadrach, Meshach, and Abed-Nego, from the midst of the fire;
Read in context
- 24அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
- 25அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
- 26அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்குவந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
- 27தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
- 28அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
Cross references
- Daniel 3:17 தானியேல் 3:17நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
- Daniel 4:2 தானியேல் 4:2உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்குநன்மையாய்க் கண்டது.
- Revelation 19:5 வெளிப்படுத்தின விசேஷம் 19:5மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.
- Isaiah 52:12 ஏசாயா 52:12நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
- Genesis 14:18 ஆதியாகமம் 14:18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
- Galatians 1:10 கலாத்தியர் 1:10இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
- Joshua 3:17 யோசுவா 3:17சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய் கடந்து போனார்கள்.
- Joshua 4:10 யோசுவா 4:10மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்துமுடியுமட்டும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக்கடந்துபோனார்கள்.
- Daniel 2:47 தானியேல் 2:47ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.
- Acts 16:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:17அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.
- Acts 27:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:23ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று:
- Ezra 5:11 எஸ்றா 5:11அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் பரலோகத்துக்கும்பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேகவருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.
Original words (Hebrew)
- Then · H116אֱדַיִן ʼĕdayin
- Nebuchadnezzar · H5020נְבוּכַדְנֶצַּר Nᵉbûwkadnetstsar
- near · H7127קְרֵב qᵉrêb
- mouth · H8651תְּרַע tᵉraʻ
- burning · H3345יְקַד yᵉqad
- fiery · H5135נוּר nûwr
- furnace · H861אַתּוּן ʼattûwn
- spake · H6032עֲנָה ʻănâh
- said · H560אֲמַר ʼămar
- Shadrach · H7715שַׁדְרַךְ Shadrak
- Meshach · H4336מֵישַׁךְ Mêyshak
- Abed-nego · H5665עֲבֵד נְגוֹא ʻĂbêd Nᵉgôwʼ
- servants · H5649עֲבַד ʻăbad
- high · H5943עִלַּי ʻillay
- God · H426אֱלָהּ ʼĕlâhh
- forth · H5312נְפַק nᵉphaq
- come · H858אָתָה ʼâthâh
- Then · H116אֱדַיִן ʼĕdayin
- Shadrach · H7715שַׁדְרַךְ Shadrak
- Meshach · H4336מֵישַׁךְ Mêyshak
- Abed-nego · H5665עֲבֵד נְגוֹא ʻĂbêd Nᵉgôwʼ
- forth · H5312נְפַק nᵉphaq
- of · H4481מִן min
- midst · H1459גַּו gav
- fire · H5135נוּר nûwr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.