Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 29:18 in Tamil

ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒருபுருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.

Aagaiyaal, antha jaathigalin thaevarkalais saevikkap pogumbadi, indru nammudaiya thaevanaagiya karththarai vittu agalugira iruthayamulla oruburushanaagilum sthireeyaagilum kudumbamaagilum koththiramaagilum ungalil iraathabadikkum, nanjsaiyum ettiyaiyum mulaippikkira yaathoru vaer ungalil iraathabadikkum paarungal.

Download verse image

Deuteronomy 29:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால், அந்த மக்களின் தெய்வங்களை வணங்கப்போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய யெகோவாவை விட்டு விலகுகிற இருதயமுள்ள ஒரு ஆணாகிலும், பெண்ணாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இல்லாதபடிக்கும், விஷத்தையும் கசப்பையும் முளைப்பிக்கிற எந்தவொரு வேர் உங்களில் இல்லாமலிருக்கப்பாருங்கள்.
Open Tamil Contemporary Version
உங்களுக்குள் ஒரு ஆணோ, பெண்ணோ, வம்சமோ, கோத்திரமோ உங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபடுவதை விட்டு விலகி, அந்த நாடுகளுடைய தெய்வங்களை வழிபடப் போகாமலிருக்கும்படி கவனமாயிருங்கள். அப்படிப்பட்ட கசப்பான விஷத்தை உருவாக்கும் வேர், உங்களுக்குள் இராதபடியும் கவனமாயிருங்கள்.
Tamil Easy Reading Version
இங்கே ஒரு ஆணோ, பெண்ணோ, கோத்திரமோ இன்று, நமது தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகாதபடி உறுதியாயிருங்கள். அந்நிய நாடுகளிலுள்ள தெய்வங்களுக்கு சேவை செய்ய எவரும் போகவேண்டாம். அவ்வாறு செய்கிற ஜனங்கள் கசப்பும், விஷத் தன்மையும் உள்ள கனியுள்ள செடி போல இருப்பார்கள்.

Deuteronomy 29:18 in English

King James Version (KJV)
Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from the LORD our God, to go [and] serve the gods of these nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
World English Bible (WEB)
lest there should be among you man, woman, family, or tribe whose heart turns away today from the LORD our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that produces bitter poison;
American Standard Version (ASV)
lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from Jehovah our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
Bible in Basic English (BBE)
So that there may not be among you any man or woman or family or tribe whose heart is turned away from the Lord our God today, to go after other gods and give them worship; or any root among you whose fruit is poison and bitter sorrow;
Darby Translation (DBY)
lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from Jehovah our God, to go and serve the gods of these nations; lest there should be among you a root that beareth gall and wormwood,
Webster's Bible (WBS)
Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from the LORD our God, to go [and] serve the gods of these nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
Young's Literal Translation (YLT)
lest there be among you a man or woman, or family or tribe, whose heart is turning to-day from Jehovah our God, to go to serve the gods of those nations, lest there be in you a root fruitful of gall and wormwood:

Read in context

  1. 16நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
  2. 17அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.
  3. 18ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒருபுருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
  4. 19அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார்.
  5. 20அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
Read all of Deuteronomy 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.