Deuteronomy 9:25 in Tamil
கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல்கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
Karththar ungalai azhippaen endru sonnabadiyinaal, naan munpolkarththarin samugaththil iravum pagalum naarpathunaal vizhunthugidanthaen; appozhuthu naan karththarai nokkip pannina vinnappamaavathu:
Deuteronomy 9:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “உங்களை அழிப்பேன் என்று யெகோவா சொன்னதினால், நான் முன்புபோல யெகோவாவின் சமுகத்தில் இரவும்பகலும் நாற்பது நாட்கள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் யெகோவாவை நோக்கிச் செய்த விண்ணப்பம் என்னவென்றால்:
- Open Tamil Contemporary Version
- யெகோவா, தான் உங்களை அழிக்கப்போவதாகச் சொன்னதினால், நான் இரவும் பகலும் நாற்பது நாட்கள் யெகோவாவுக்கு முன்பாக விழுந்து கிடந்தேன்.
- Tamil Easy Reading Version
- “ஆகவே கர்த்தருக்கு முன், இரவு பகலாக 40 நாட்கள் விழுந்து கிடந்தேன். ஏனென்றால், கர்த்தர் உங்களை அழித்துவிடுவதாகச் சொன்னார்.
Deuteronomy 9:25 in English
- King James Version (KJV)
- Thus I fell down before the LORD forty days and forty nights, as I fell down [at the first;] because the LORD had said he would destroy you.
- World English Bible (WEB)
- So I fell down before the LORD the forty days and forty nights that I fell down, because the LORD had said he would destroy you.
- American Standard Version (ASV)
- So I fell down before Jehovah the forty days and forty nights that I fell down, because Jehovah had said he would destroy you.
- Bible in Basic English (BBE)
- So I went down on my face in prayer before the Lord for forty days and forty nights as I did at first; because the Lord had said that he would put an end to you.
- Darby Translation (DBY)
- So I fell down before Jehovah the forty days and forty nights, as I fell down; for Jehovah had said he would destroy you.
- Webster's Bible (WBS)
- Thus I fell down before the LORD forty days and forty nights, as I fell down [at the first] ; because the LORD had said he would destroy you.
- Young's Literal Translation (YLT)
- 'And I throw myself before Jehovah, the forty days and the forty nights, as I had thrown myself, for Jehovah hath said — to destroy you;
Read in context
- 23நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினீர்கள்.
- 24நான் உங்களை அறிந்த நாள்முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள்.
- 25கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல்கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
- 26கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக.
- 27கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக்கூடாமற்போனபடியினாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு,
Cross references
- Deuteronomy 9:18 உபாகமம் 9:18கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
- Deuteronomy 9:16 உபாகமம் 9:16நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக்கண்டேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.