Exodus 4:19 in Tamil
பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள் என்றார்.
Pinnum karththar meethiyaanilae mosaeyai nokki: nee egipthukkuth thirumbip po, un piraananai vaangaththaedina manithar ellaarum iranthubonaarkal endraar.
Exodus 4:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் யெகோவா மீதியானிலே மோசேயை நோக்கி: “நீ எகிப்திற்குத் திரும்பிப் போ, உன்னுடைய உயிரை எடுக்கத்தேடின மனிதர்கள் எல்லோரும் இறந்துபோனார்கள்” என்றார்.
- Open Tamil Contemporary Version
- மீதியான் தேசத்தில் யெகோவா மோசேயிடம், “உன்னைக் கொலைசெய்ய எண்ணியிருந்தவர்களான எல்லோரும் இறந்துவிட்டார்கள். ஆகையால், நீ எகிப்திற்குத் திரும்பவும் போ” என்று சொல்லியிருந்தார்.
- Tamil Easy Reading Version
- மோசே இன்னும் மீதியானில் இருக்கும்போதே, தேவன் மோசேயை நோக்கி, “இப்போது நீ எகிப்திற்குத் திரும்பிப் போவதற்குப் பொருத்தமான வேளை. உன்னைக் கொல்ல விரும்பிய மனிதர்கள் மரித்து போய்விட்டனர்” என்றார்.
Exodus 4:19 in English
- King James Version (KJV)
- And the LORD said unto Moses in Midian, Go, return into Egypt: for all the men are dead which sought thy life.
- World English Bible (WEB)
- The LORD said to Moses in Midian, “Go, return into Egypt; for all the men who sought your life are dead.”
- American Standard Version (ASV)
- And Jehovah said unto Moses in Midian, Go, return into Egypt; for all the men are dead that sought thy life.
- Bible in Basic English (BBE)
- And the Lord said to Moses in Midian, Go back to Egypt, for all the men are dead who were attempting to take your life.
- Darby Translation (DBY)
- And Jehovah said to Moses in Midian, Go, return to Egypt; for all the men are dead who sought thy life.
- Webster's Bible (WBS)
- And the LORD said to Moses in Midian, Go, return into Egypt; for all the men are dead who sought thy life.
- Young's Literal Translation (YLT)
- And Jehovah saith unto Moses in Midian, 'Go, turn back to Egypt, for all the men have died who seek thy life;'
Read in context
- 17இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.
- 18மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.
- 19பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள் என்றார்.
- 20அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.
- 21அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.
Cross references
- Matthew 2:20 மத்தேயு 2:20நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்.
- Exodus 2:23 யாத்திராகமம் 2:23சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
- Exodus 2:15 யாத்திராகமம் 2:15பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசேபார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.