Ezekiel 23:34 in Tamil
நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன் ஸ்தனங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
Nee athil irukkirathaik kudiththu, urinjsi, athin odugalai udaiththuppottu, un sthanangalaik keerikkolvaay; naan ithais sonnaen endru karththaraagiya aandavar uraikkiraar.
Ezekiel 23:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன்னுடைய மார்பகங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- Open Tamil Contemporary Version
- நீ அதைக் குடித்து வெறுமையாக்குவாய். அதை நீ துண்டுகளாக்கி உன் மார்பகங்களையே கிழித்துக் கொள்ளுவாய். நானே இதைச் சொன்னேன், என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
- Tamil Easy Reading Version
- அக்கோப்பையிலுள்ள விஷத்தை நீ குடிப்பாய். அதிலுள்ள கடைசி சொட்டையும் நீ குடிப்பாய். நீ அந்தக் கோப்பையை எறிந்து துண்டு துண்டாக்குவாய். நீ வேதனையினால் உன் மார்பகங்களைக் கிழிப்பாய். இவை நிகழும், ஏனென்றால், நானே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிறேன். நான் இவற்றைக் கூறினேன்.
Ezekiel 23:34 in English
- King James Version (KJV)
- Thou shalt even drink it and suck [it] out, and thou shalt break the sherds thereof, and pluck off thine own breasts: for I have spoken [it], saith the Lord GOD.
- World English Bible (WEB)
- You will even drink it and drain it out. You will gnaw the broken pieces of it, and will tear your breasts; for I have spoken it,’ says the Lord GOD.
- American Standard Version (ASV)
- Thou shalt even drink it and drain it out, and thou shalt gnaw the sherds thereof, and shalt tear thy breasts; for I have spoken it, saith the Lord Jehovah.
- Bible in Basic English (BBE)
- And after drinking it and draining it out, you will take the last drops of it to the end, pulling off your breasts: for I have said it, says the Lord.
- Darby Translation (DBY)
- thou shalt even drink it and suck it out, and thou shalt gnaw the sherds thereof, and pluck off thine own breasts: for I have spoken [it], saith the Lord Jehovah.
- Webster's Bible (WBS)
- Thou shalt even drink it, and empty it to the dregs, and thou shalt break its pieces, and pluck off thy own breasts: for I have spoken [it] , saith the Lord GOD.
- Young's Literal Translation (YLT)
- And thou hast drunk it, and hast drained [it], And its earthen ware thou dost gnaw, And thine own breasts thou pluckest off, For I have spoken, An affirmation of the Lord Jehovah,
Read in context
- 32கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.
- 33சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.
- 34நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன் ஸ்தனங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
- 35ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- 36பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காடமனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.
Cross references
- Psalm 75:8 சங்கீதம் 75:8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
- Isaiah 51:17 ஏசாயா 51:17எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
- Revelation 18:7 வெளிப்படுத்தின விசேஷம் 18:7அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.
- Ezekiel 23:3 எசேக்கியேல் 23:3அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது.
- Ezekiel 23:8 எசேக்கியேல் 23:8தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.