Ezekiel 4:2 in Tamil
அதற்கு விரோதமாக முற்றிகைபோட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் யந்திரங்களை வை.
Atharku virothamaaga mutrigaibottu, atharku virothamaagak koththalangalaik katti, atharku virothamaaga manmaedubottu, atharku virothamaaga iraanuvangalai niruththi, sutrilum atharku virothamaaga mathilidikkum yanthirangalai vai.
Ezekiel 4:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதை சுற்றிலும் முற்றுகைபோட்டு, அதை சுற்றிலும் கோட்டைகளை கட்டி, அதை சுற்றிலும் மண்மேடுபோட்டு, அதை சுற்றிலும் இராணுவங்களை நிறுத்தி, அதை சுற்றிலும் மதில் இடிக்கும் இயந்திரங்களை வை.
- Open Tamil Contemporary Version
- அதன்பின் அதை முற்றுகையிட்டு, அதற்கு விரோதமாய் முற்றுகைத்தளங்களை அமைத்து, கோட்டை கட்டி, மண்மேடுகளைப் போடு. அதற்கு விரோதமாக முகாம்களை அமைத்து, சுற்றிலும் சுவரை இடிக்கும் இயந்திரங்களை வை.
- Tamil Easy Reading Version
- பிறகு நகரத்தைச் சுற்றி முற்றுகையிடும் படை போல நடி. நகரத்தைத் தாக்க உதவுவதற்கு, அதைச் சுற்றி மதிலைக் கட்டு. நகரத்தின் சுவர்வரை போகும் ஒரு மண் பாதையைப் போடு, இடிக்கும் கருவிகளைக் கொண்டு வா. நகரத்தைச் சுற்றிப் படை முகாம்களை ஏற்படுத்து.
Ezekiel 4:2 in English
- King James Version (KJV)
- And lay siege against it, and build a fort against it, and cast a mount against it; set the camp also against it, and set [battering] rams against it round about.
- World English Bible (WEB)
- Lay siege against it, build forts against it, and cast up a mound against it. Also set camps against it and plant battering rams against it all around.
- American Standard Version (ASV)
- and lay siege against it, and build forts against it, and cast up a mound against it; set camps also against it, and plant battering rams against it round about.
- Bible in Basic English (BBE)
- And make an attack on it, shutting it in, building strong places against it, and making high an earthwork against it; and put up tents against it, placing engines all round it for smashing down its walls.
- Darby Translation (DBY)
- and lay siege against it, and build forts against it, and cast a mound against it, and set camps against it, and place battering-rams against it round about.
- Webster's Bible (WBS)
- And lay siege against it, and build a fort against it, and cast a mount against it; set the camp also against it, and set [battering] rams against it on every side.
- Young's Literal Translation (YLT)
- and hast placed against it a siege, and builded against it a fortification, and poured out against it a mount, and placed against it camps, yea, set thou against it battering-rams round about.
Read in context
- 1மனுபுத்திரனே, நீ ஒரு செங்கல்லை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,
- 2அதற்கு விரோதமாக முற்றிகைபோட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் யந்திரங்களை வை.
- 3மேலும் நீ ஒரு இருப்புச்சட்டியைவாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இருப்புச்சுவராக்கி, அது முற்றிகையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிகைபோட்டுக் கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம்.
- 4நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.
Cross references
- Ezekiel 21:22 எசேக்கியேல் 21:22தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.
- Jeremiah 6:6 எரேமியா 6:6சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.
- Jeremiah 52:4 எரேமியா 52:4அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அ வ னு டை ய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
- Jeremiah 39:1–2 எரேமியா 39:1–2யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிகைபோட்டார்கள். சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருஷம் நாலாம் மாதம், ஒன்பதாம் தேதியிலே நகரத்து மதிலில் திறப்புக்கண்டது.
- Luke 19:42–44 லூக்கா 19:42–44உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்⟨n⟩பாழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.