Ezekiel 44:19 in Tamil
அவர்கள் வெளிப்பிராகாரமாகியபுறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக்கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப் படுத்தலாகாது.
Avarkal velippiraagaaramaagiyaburamutraththilae janangalidaththil pogumbothu, avarkal thaangal aaraathanaiseyyum samayaththil uduththiyiruntha thangal vasthirangalaikkazhatri, avaigalaip parisuththa araiveedugalil vaiththu, vaerae vasthirangalai uduththikkollakkadavarkal; thangal vasthirangalaalae janangalaip parisuththap paduththalaagaathu.
Ezekiel 44:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் வெளிமுற்றமாகிய வெளிமுற்றத்திலே மக்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் நேரத்தில் அணிந்திருந்த தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்; தங்களுடைய ஆடைகளாலே மக்களைப் பரிசுத்தப்படுத்தக்கூடாது.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் மக்கள் இருக்கும் வெளிமுற்றத்திற்குப் போகும்போது, அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுகையில் உடுத்தியிருந்த உடைகளைக் கழற்றி அவற்றைப் பரிசுத்த அறைகளில் வைத்துவிட்டு, வேறு உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உடைகளைத் தொடுவதன் மூலமாக மக்கள் தாங்கள் பரிசுத்தமடைய முயற்சிக்கக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் வெளிப் பிரகாரமாகிய புறமுற்றத்திலுள்ள ஜனங்களிடம் போகும்போது, தாங்கள் ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி விடுவார்கள். அவற்றை பரிசுத்த அறைகளில் வைப்பார்கள். பிறகு அவர்கள் வேறு ஆடைகளை அணிவார்கள், இவ்வாறு அவர்கள் தம் பரிசுத்தமான ஆடைகளை ஜனங்கள் தொடவிடமாட்டார்கள்.
Ezekiel 44:19 in English
- King James Version (KJV)
- And when they go forth into the utter court, [even] into the utter court to the people, they shall put off their garments wherein they ministered, and lay them in the holy chambers, and they shall put on other garments; and they shall not sanctify the people with their garments.
- World English Bible (WEB)
- When they go out into the outer court, even into the outer court to the people, they shall put off their garments in which they minister and lay them in the holy rooms. They shall put on other garments, that they not sanctify the people with their garments.
- American Standard Version (ASV)
- And when they go forth into the outer court, even into the outer court to the people, they shall put off their garments wherein they minister, and lay them in the holy chambers; and they shall put on other garments, that they sanctify not the people with their garments.
- Bible in Basic English (BBE)
- And when they go out into the outer square to the people, they are to take off the robes in which they do the work of priests, and put them away in the holy rooms, and put on other clothing, so that the people may not be made holy by their robes.
- Darby Translation (DBY)
- And when they go forth into the outer court, into the outer court to the people, they shall put off their garments wherein they ministered, and lay them in the holy cells; and they shall put on other garments, that they may not hallow the people with their garments.
- Webster's Bible (WBS)
- And when they go forth into the outer court, [even] into the outer court to the people, they shall put off their garments in which they ministered, and lay them in the holy chambers, and they shall put on other garments; and they shall not sanctify the people with their garments.
- Young's Literal Translation (YLT)
- And in their going forth unto the outer court — unto the outer court unto the people — they strip off their garments, in which they are ministering, and have placed them in the holy chambers, and have put on other garments; and they do not sanctify the people in their own garments.
Read in context
- 17உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது, சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திகொள்வார்களாக; அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனைசெய்கையில், ஆட்டுமயிர் உடுப்பைத்தரிக்கலாகாது.
- 18அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது.
- 19அவர்கள் வெளிப்பிராகாரமாகியபுறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக்கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப் படுத்தலாகாது.
- 20அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக்கத்தரிக்கக்கடவர்கள்.
- 21ஆசாரியர்களில் ஒருவனும், உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.
Cross references
- Leviticus 6:27 லேவியராகமம் 6:27அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில்தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.
- Ezekiel 46:20 எசேக்கியேல் 46:20அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலேகொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம் பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவேஎன்றார்.
- Leviticus 6:10–11 லேவியராகமம் 6:10–11ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி, பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.
- Matthew 23:17–19 மத்தேயு 23:17–19மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
- Exodus 29:37 யாத்திராகமம் 29:37ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.
- Exodus 30:29 யாத்திராகமம் 30:29அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.
- Ezekiel 42:13–14 எசேக்கியேல் 42:13–14அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும், தென்புறமான அறைவீடுகளும், பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது. ஆசாரியர் உட்பிரவேசிக்கும் போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளிப்பிராகாரத்துக்கு வராததற்கு முன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து, உடுத்தியிருந்த வஸ்திரங்களைக் கழற்றிவைப்பார்கள்; அவ்வஸ்திரங்கள் பரிசுத்தமானவைகள்; வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ஜனத்தின் பிராகாரத்திலேபோவார்கள் என்றார்.
- 1 Corinthians 3:5–6 1 கொரிந்தியர் 3:5–6பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
Original words (Hebrew)
- forth · H3318יָצָא yâtsâʼ
- utter · H2435חִיצוֹן chîytsôwn
- court · H2691חָצֵר châtsêr
- utter · H2435חִיצוֹן chîytsôwn
- court · H2691חָצֵר châtsêr
- people · H5971עַם ʻam
- off · H6584פָּשַׁט pâshaṭ
- garments · H899בֶּגֶד beged
- ministered · H8334שָׁרַת shârath
- lay · H3240יָנַח yânach
- holy · H6944קֹדֶשׁ qôdesh
- chambers · H3957לִשְׁכָּה lishkâh
- put · H3847לָבַשׁ lâbash
- other · H312אַחֵר ʼachêr
- garments · H899בֶּגֶד beged
- sanctify · H6942קָדַשׁ qâdash
- people · H5971עַם ʻam
- garments · H899בֶּגֶד beged
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.