Ezekiel 47:6 in Tamil
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயாஎன்றுசொல்லி, என்னை நதியோரமாய்த்திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
Avar ennai nokki: manubuththiranae, ithaik kandaayaaendrusolli, ennai nathiyoramaayththirumba nadaththikkondubonaar.
Ezekiel 47:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
- Open Tamil Contemporary Version
- அவன் என்னிடம், “மனுபுத்திரனே, இதை நீ காண்கிறாயா?” என்று கேட்டான். பின்பு அவன் என்னை ஆற்றின் கரைக்கு நடத்திவந்தான்.
- Tamil Easy Reading Version
- பிறகு அம்மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, நீ பார்த்ததை உன்னிப்பாகக் கவனித்தாயா?” என்றான். பிறகு என்னை, நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டு போனான்.
Ezekiel 47:6 in English
- King James Version (KJV)
- And he said unto me, Son of man, hast thou seen [this]? Then he brought me, and caused me to return to the brink of the river.
- World English Bible (WEB)
- He said to me, “Son of man, have you seen this?” Then he brought me and caused me to return to the bank of the river.
- American Standard Version (ASV)
- And he said unto me, Son of man, hast thou seen [this]? Then he brought me, and caused me to return to the bank of the river.
- Bible in Basic English (BBE)
- And he said to me, Son of man, have you seen this? Then he took me to the river's edge.
- Darby Translation (DBY)
- And he said unto me, Son of man, hast thou seen [this]? And he led me, and brought me back to the bank of the river.
- Webster's Bible (WBS)
- And he said to me, Son of man, hast thou seen [this] ? Then he brought me, and caused me to return to the brink of the river.
- Young's Literal Translation (YLT)
- And he saith unto me, 'Hast thou seen, son of man?' and he leadeth me, and bringeth me back unto the edge of the stream.
Read in context
- 4பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.
- 5பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சலாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.
- 6அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயாஎன்றுசொல்லி, என்னை நதியோரமாய்த்திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
- 7நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.
- 8அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.
Cross references
- Ezekiel 44:5 எசேக்கியேல் 44:5அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையுங்குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து, உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,
- Ezekiel 40:4 எசேக்கியேல் 40:4அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.
- Ezekiel 8:6 எசேக்கியேல் 8:6அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,
- Zechariah 4:2 சகரியா 4:2நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.
- Zechariah 5:2 சகரியா 5:2தூதன்: நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.
- Jeremiah 1:11–13 எரேமியா 1:11–13பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார். கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர்: நீ காண்கிறது என்னஎன்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.
- Ezekiel 8:17 எசேக்கியேல் 8:17அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத்தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.
- Matthew 13:51 மத்தேயு 13:51பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.