Ezekiel 5:12 in Tamil
உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.
Unnilae moondril oru pangu kollainoyaal saavaarkal, panjsaththaalum un naduvilae madinthubovaarkal; moondril oru pangu unnais sutrilum irukkira pattayaththaal vettundu vizhuvaarkal; moondril oru pangai naan sagala thisaigalilum sitharippogappanni, avarkal pinnae pattayaththai uruvuvaen.
Ezekiel 5:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளை நோயால் மரணமடைவார்கள், பஞ்சத்தாலும் உன்னுடைய நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகச்செய்து, அவர்கள் பின்னே வாளை உருவுவேன்.
- Open Tamil Contemporary Version
- உனது மக்கள் கூட்டங்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும் நகரத்திற்குள் அழிவார்கள். நகரத்துக்கு வெளியே மூன்றில் ஒரு பங்கினர் வாளால் மடிவார்கள். மூன்றில் ஒரு பகுதியினரை நான் காற்றில் சிதறடித்து, உருவின வாளோடு அவர்களைப் பின்தொடர்வேன்.
- Tamil Easy Reading Version
- உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்குள் பசியாலும், கொள்ளைநோயாலும் மரிப்பார்கள். உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்கு வெளியில் போரில் மரிப்பார்கள். உனது ஜனங்களில் பங்கினரை எனது வாளை வெளியிலெடுத்து அவர்களை தூரதேசங்களுக்கு விரட்டுவேன்.
Ezekiel 5:12 in English
- King James Version (KJV)
- A third part of thee shall die with the pestilence, and with famine shall they be consumed in the midst of thee: and a third part shall fall by the sword round about thee; and I will scatter a third part into all the winds, and I will draw out a sword after them.
- World English Bible (WEB)
- A third part of you will die with the pestilence, and they will be consumed with famine within you. A third part will fall by the sword around you. A third part I will scatter to all the winds, and will draw out a sword after them.
- American Standard Version (ASV)
- A third part of thee shall die with the pestilence, and with famine shall they be consumed in the midst of thee; and a third part shall fall by the sword round about thee; and a third part I will scatter unto all the winds, and will draw out a sword after them.
- Bible in Basic English (BBE)
- A third of you will come to death from disease, wasting away among you through need of food; a third will be put to the sword round about you; and a third I will send away to every wind, letting loose a sword after them.
- Darby Translation (DBY)
- A third part of thee shall die by the pestilence, and shall be consumed by the famine in the midst of thee; and a third part shall fall by the sword round about thee; and I will scatter a third part to all the winds, and I will draw out a sword after them.
- Webster's Bible (WBS)
- A third part of thee shall die with the pestilence, and with famine shall they be consumed in the midst of thee: and a third part shall fall by the sword around thee; and I will scatter a third part into all the winds, and I will draw out a sword after them.
- Young's Literal Translation (YLT)
- Thy third part — by pestilence they die, And by famine are consumed in thy midst, And the third part, by sword they fall round about thee, And the third part, to every wind I scatter, And a sword I draw out after them.
Read in context
- 10ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- 11ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
- 12உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.
- 13இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.
- 14கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன்.
Cross references
- Ezekiel 5:2 எசேக்கியேல் 5:2மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிகைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலேதூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.
- Jeremiah 15:2 எரேமியா 15:2எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.
- Jeremiah 43:10–11 எரேமியா 43:10–11அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல் அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜகூடாரத்தை அவைகளின்மேல் விரிப்பான். அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.
- Jeremiah 21:9 எரேமியா 21:9இந்த நகரத்திலே தரிக்கிறவன்பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களைமுற்றிகைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப் போய்விடுகிறவனோபிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்.
- Ezekiel 12:14 எசேக்கியேல் 12:14அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.
- Jeremiah 44:27 எரேமியா 44:27இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனுஷர் எல்லாரும் ஒழிந்துதீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாவார்கள்.
- Ezekiel 5:10 எசேக்கியேல் 5:10ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- Ezekiel 6:11–12 எசேக்கியேல் 6:11–12கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய சகல பொல்லாத அருவருப்புகளினிமித்தமும் ஐயோ! என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள். தூரத்திலிருக்கிறவன் கொள்ளைநோயால் சாவான்; சமீபத்திலிருக்கிறவன்பட்டயத்தால் விழுவான்; மீதியாயிருந்து, முற்றிகை போடப்பட்டவன் பஞ்சத்தால் சாவான்; இப்படி அவர்களில் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளுவேன்.
- Amos 9:4 ஆமோஸ் 9:4அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.
- Ezekiel 6:8 எசேக்கியேல் 6:8நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப்படும்போது, புறஜாதிகளுக்குள்ளே பட்டயத்துக்குத் தப்புவாரை உங்களுக்கு மீதியாக வைப்பேன்.
- Deuteronomy 28:65 உபாகமம் 28:65அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
- Zechariah 7:14 சகரியா 7:14அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்: அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப் போகப் பண்ணினார்கள் என்றார்.
Original words (Hebrew)
- part · H7992שְׁלִישִׁי shᵉlîyshîy
- die · H4191מוּת mûwth
- pestilence · H1698דֶּבֶר deber
- famine · H7458רָעָב râʻâb
- consumed · H3615כָּלָה kâlâh
- midst · H8432תָּוֶךְ tâvek
- part · H7992שְׁלִישִׁי shᵉlîyshîy
- fall · H5307נָפַל nâphal
- sword · H2719חֶרֶב chereb
- about · H5439סָבִיב çâbîyb
- scatter · H2219זָרָה zârâh
- part · H7992שְׁלִישִׁי shᵉlîyshîy
- winds · H7307רוּחַ rûwach
- out · H7324רוּק rûwq
- sword · H2719חֶרֶב chereb
- after · H310אַחַר ʼachar
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.