Ezekiel 6:13 in Tamil
அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையானதூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
Avarkal thangal naragalaana sagala vikkiragangalukkum mathuravaasanaiyaanathoobaththaik kaattina sthalangalaagiya uyarntha sagala maedugalilum, parvathangaludaiya sagala sigarangalilum, pachaiyaana sagala virutchangalingeezhum, thazhaiththirukkira sagala karvaali marangalingeezhum, avarkaludaiya naragalaana vikkiragangalin naduvilum avarkaludaiya palibeedangalais sutrilum, avarkalil kolaiyundavarkal kidakkumbothu, naan karththar endru arinthugolvaarkal.
Ezekiel 6:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் தங்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளுக்கும் இனியவாசனையான தூபத்தைக் காட்டின இடங்களாகிய உயர்ந்த எல்லா மேடுகளிலும், மலைகளுடைய எல்லா சிகரங்களிலும், பச்சையான எல்லா மரங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய அசுத்தமான சிலைகளின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் கிடக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
- Open Tamil Contemporary Version
- தங்களது விக்கிரகங்களுக்கெல்லாம் நறுமண தூபங்காட்டிய பலிபீடங்களைச் சுற்றிலும், விக்கிரகங்களின் நடுவிலும், ஒவ்வொரு மேடையிலும், ஒவ்வொரு மலை உச்சியிலும், பச்சையான ஒவ்வொரு மரத்தின் கீழும், ஒவ்வொரு கர்வாலி மரத்தின் கீழும் அவர்களில் கொல்லப்பட்டவர்கள் கிடக்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
- Tamil Easy Reading Version
- பிறகுதான், நான் கர்த்தர் என்பதை நீ அறிவாய். உங்களது மரித்த உடல்கள் நரகலான சிலைகளுக்கு முன்னாலும் பலிபீடங்களுக்கு அருகிலும் கிடக்கும்போது நீ அறிவாய். அந்த உடல்கள், உங்களது ஒவ்வொரு வழிபாட்டு இடங்களிலும், உயர்ந்த குன்றுகளிலும், மலைகளிலும், ஒவ்வொரு பச்சை மரங்கள் மற்றும் இலைகளுடனுள்ள ஓக் மரங்களின் அடியிலும், கிடக்கும். அந்த இடங்களில் எல்லாம் நீ பலிகளைச் செலுத்தினாய். அங்கே, அவை உன்னுடைய, நரகலான சிலைகளுக்கு இனிய வாசனையை வெளிப்படுத்தியது.
Ezekiel 6:13 in English
- King James Version (KJV)
- Then shall ye know that I [am] the LORD, when their slain [men] shall be among their idols round about their altars, upon every high hill, in all the tops of the mountains, and under every green tree, and under every thick oak, the place where they did offer sweet savour to all their idols.
- World English Bible (WEB)
- You will know that I am the LORD when their slain men are among their idols around their altars, on every high hill, on all the tops of the mountains, under every green tree, and under every thick oak—the places where they offered pleasant aroma to all their idols.
- American Standard Version (ASV)
- And ye shall know that I am Jehovah, when their slain men shall be among their idols round about their altars, upon every high hill, on all the tops of the mountains, and under every green tree, and under every thick oak, the places where they offered sweet savor to all their idols.
- Bible in Basic English (BBE)
- And you will be certain that I am the Lord, when their dead men are stretched among their images round about their altars on every high hill, on all the tops of the mountains, and under every branching tree, and under every thick oak-tree, the places where they made sweet smells to all their images.
- Darby Translation (DBY)
- And ye shall know that I [am] Jehovah, when their slain shall be among their idols, round about their altars, upon every high hill, on all the tops of the mountains, and under every green tree, and under every thick terebinth, the places where they offered sweet savour to all their idols.
- Webster's Bible (WBS)
- Then shall ye know that I [am] the LORD, when their slain [men] shall be among their idols round about their altars, upon every high hill, on all the tops of the mountains, and under every green tree, and under every thick oak, the place where they offered sweet savor to all their idols.
- Young's Literal Translation (YLT)
- And ye have known that I [am] Jehovah, In their wounded being in the midst of their idols, Round about their altars, On every high hill, on all tops of mountains, And under every green tree, and under every thick oak, The place where they gave sweet fragrance to all their idols.
Read in context
- 11கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய சகல பொல்லாத அருவருப்புகளினிமித்தமும் ஐயோ! என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.
- 12தூரத்திலிருக்கிறவன் கொள்ளைநோயால் சாவான்; சமீபத்திலிருக்கிறவன்பட்டயத்தால் விழுவான்; மீதியாயிருந்து, முற்றிகை போடப்பட்டவன் பஞ்சத்தால் சாவான்; இப்படி அவர்களில் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளுவேன்.
- 13அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையானதூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
- 14நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
Cross references
- Ezekiel 20:28 எசேக்கியேல் 20:28அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்திலே நான் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு விருட்சத்தையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, அவ்விடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்கள் காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்கள் தூபங்களைக் காட்டி, தங்கள் பானபலிகளை வார்த்தார்கள்.
- Hosea 4:13 ஓசியா 4:13அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள்.
- Jeremiah 2:20 எரேமியா 2:20பூர்வகாலந்துவங்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
- 1 Kings 14:23 1 இராஜாக்கள் 14:23அவர்களும் உயர்ந்த சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
- Ezekiel 6:4–7 எசேக்கியேல் 6:4–7உங்கள் பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு, உங்கள் சிலைகள் தகர்க்கப்படும்; உங்களில் கொலையுண்கிறவர்களை உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக விழப்பண்ணுவேன். நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி, உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன். உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ளபட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும். கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
- Isaiah 57:5–7 ஏசாயா 57:5–7நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடேமோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள். பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ? நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.
- 2 Kings 16:4 2 இராஜாக்கள் 16:4மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.
- Isaiah 1:29 ஏசாயா 1:29நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.
- Jeremiah 3:6 எரேமியா 3:6யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்பண்ணினாள்.
- Isaiah 65:3–4 ஏசாயா 65:3–4அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:
- Isaiah 66:17 ஏசாயா 66:17தங்களைத்தாங்களே பரிசுத்தப் படுத்திக் கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத்தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச்சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Isaiah 37:20 ஏசாயா 37:20இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.
Original words (Hebrew)
- know · H3045יָדַע yâdaʻ
- slain · H2491חָלָל châlâl
- among · H8432תָּוֶךְ tâvek
- idols · H1544גִּלּוּל gillûwl
- about · H5439סָבִיב çâbîyb
- altars · H4196מִזְבֵּחַ mizbêach
- high · H7311רוּם rûwm
- hill · H1389גִּבְעָה gibʻâh
- tops · H7218רֹאשׁ rôʼsh
- mountains · H2022הַר har
- green · H7488רַעֲנָן raʻănân
- tree · H6086עֵץ ʻêts
- thick · H5687עָבֹת ʻâbôth
- oak · H424אֵלָה ʼêlâh
- place · H4725מָקוֹם mâqôwm
- offer · H5414נָתַן nâthan
- sweet · H5207נִיחוֹחַ nîychôwach
- savour · H7381רֵיחַ rêyach
- idols · H1544גִּלּוּל gillûwl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.