Ezekiel 6:2 in Tamil
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
Manubuththiranae, nee isravaelin parvathangalukku naeraaga un mugaththaith thiruppi, avaigalukku virothamaagath theerkkatharisanam uraiththus sollavaendiyathu ennavendraal,
Ezekiel 6:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனிதகுமாரனே, நீ இஸ்ரவேலின் மலைகளுக்கு நேராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
- Open Tamil Contemporary Version
- “மனுபுத்திரனே, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாக இறைவாக்கு சொல்.
- Tamil Easy Reading Version
- அவர் சொன்னார், “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மலைகளை நோக்கித் திரும்பு! எனக்காக அவற்றுக்கு எதிராகப் பேசு.
Ezekiel 6:2 in English
- King James Version (KJV)
- Son of man, set thy face toward the mountains of Israel, and prophesy against them,
- World English Bible (WEB)
- “Son of man, set your face toward the mountains of Israel, and prophesy to them,
- American Standard Version (ASV)
- Son of man, set thy face toward the mountains of Israel, and prophesy unto them,
- Bible in Basic English (BBE)
- Son of man, let your face be turned to the mountains of Israel, and be a prophet to them, and say,
- Darby Translation (DBY)
- Son of man, set thy face toward the mountains of Israel, and prophesy against them,
- Webster's Bible (WBS)
- Son of man, set thy face towards the mountains of Israel, and prophesy against them,
- Young's Literal Translation (YLT)
- 'Son of man, set thy face unto mountains of Israel, and prophesy concerning them:
Read in context
- 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- 2மனுபுத்திரனே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
- 3இஸ்ரவேலின் பர்வதங்களே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன்.
- 4உங்கள் பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு, உங்கள் சிலைகள் தகர்க்கப்படும்; உங்களில் கொலையுண்கிறவர்களை உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக விழப்பண்ணுவேன்.
Cross references
- Ezekiel 19:9 எசேக்கியேல் 19:9அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்குட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடத்துக்குக்கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள்.
- Ezekiel 13:17 எசேக்கியேல் 13:17மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
- Ezekiel 36:1 எசேக்கியேல் 36:1மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
- Ezekiel 33:28 எசேக்கியேல் 33:28நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் அவாந்தரமாய்க் கிடக்கும்.
- Ezekiel 20:46 எசேக்கியேல் 20:46மனுபுத்திரனே, நீ உன் முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன் வசனத்தைப் பொழிந்து, தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
- Ezekiel 34:14 எசேக்கியேல் 34:14அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.
- Ezekiel 25:2 எசேக்கியேல் 25:2மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
- Ezekiel 37:22 எசேக்கியேல் 37:22அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.
- Ezekiel 21:2 எசேக்கியேல் 21:2மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன் வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து.
- Ezekiel 35:12 எசேக்கியேல் 35:12இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.
- Micah 6:1–2 மீகா 6:1–2கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது. பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.
- Ezekiel 38:2–3 எசேக்கியேல் 38:2–3மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.