Galatians 5:11 in Tamil
சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
Sagothararae, ithuvaraikkum naan viruththasaethanaththaip pirasangikkiravanaayirunthaal, ithuvaraikkum ennaththirkuth thunpappadugiraen? appadiyaanaal siluvaiyaippatri varum idaral ozhinthirukkumae.
Galatians 5:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
- Open Tamil Contemporary Version
- பிரியமானவர்களே, விருத்தசேதனம் அவசியம்தான் என்று நான் இன்னும் பிரசங்கித்தால், நான் ஏன் இன்னும் யூதர்களால் துன்புறுத்தப்படுகிறேன்? அப்படி நான் பிரசங்கிப்பது உண்மை என்றால், கிறிஸ்துவின் சிலுவையின் காரணமாய் வரும் துன்புறுத்தல் நின்று போயிருக்குமே.
- Tamil Easy Reading Version
- சகோதர சகோதரிகளே! மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் என்றும் போதித்ததில்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் ஏன் இவ்வாறு துன்பப்பட வேண்டும்? மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தால் சிலுவையை ஏற்பதுபற்றி வரும் தடை நிறுத்தப்பட்டிருக்கும்.
Galatians 5:11 in English
- King James Version (KJV)
- And I, brethren, if I yet preach circumcision, why do I yet suffer persecution? then is the offence of the cross ceased.
- World English Bible (WEB)
- But I, brothers, if I still preach circumcision, why am I still persecuted? Then the stumbling block of the cross has been removed.
- American Standard Version (ASV)
- But I, brethren, if I still preach circumcision, why am I still persecuted? then hath the stumbling-block of the cross been done away.
- Bible in Basic English (BBE)
- But I, brothers, if I am still preaching circumcision, why am I still attacked? then has the shame of the cross been taken away.
- Darby Translation (DBY)
- But I, brethren, if I yet preach circumcision, why am I yet persecuted? Then the scandal of the cross has been done away.
- Webster's Bible (WBS)
- And I, brethren, if I yet preach circumcision, why do I yet suffer persecution? then hath the offense of the cross ceased.
- Young's Literal Translation (YLT)
- And I, brethren, if uncircumcision I yet preach, why yet am I persecuted? then hath the stumbling-block of the cross been done away;
Read in context
- 9புளிப்புள்ள கொஞ்சமாவானதுபிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
- 10நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்.
- 11சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
- 12உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.
- 13சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.
Cross references
- 1 Corinthians 1:23 1 கொரிந்தியர் 1:23நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.
- Galatians 6:12 கலாத்தியர் 6:12மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
- Galatians 4:29 கலாத்தியர் 4:29ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
- Acts 21:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:21புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படிபோதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
- 1 Corinthians 1:18 1 கொரிந்தியர் 1:18சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
- Galatians 2:3 கலாத்தியர் 2:3ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.
- 1 Corinthians 15:30 1 கொரிந்தியர் 15:30நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்?
- 1 Peter 2:8–9 1 பேதுரு 2:8–9அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப் படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத்தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
- Acts 21:28 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:28இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்து வருகிறவன் இவன்தான்; இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
- Isaiah 8:14 ஏசாயா 8:14அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
- Acts 16:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:3அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
- Romans 9:32–33 ரோமர் 9:32–33என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேதேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
Original words (Greek)
- And · G1161δέ dé
- I · G1473ἐγώ egṓ
- brethren · G80ἀδελφός adelphós
- if · G1487εἰ ei
- I · G2784κηρύσσω kērýssō
- yet · G2089ἔτι éti
- preach · G2784κηρύσσω kērýssō
- circumcision · G4061περιτομή peritomḗ
- why · G5101τίς tís
- I · G1377διώκω diṓkō
- yet · G2089ἔτι éti
- persecution · G1377διώκω diṓkō
- then · G686ἄρα ára
- is · G2673καταργέω katargéō
- offence · G4625σκάνδαλον skándalon
- cross · G4716σταυρός staurós
- ceased · G2673καταργέω katargéō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.