Genesis 14:17 in Tamil
அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
Avan ketharlaagomaeraiyum, avanodiruntha raajaakkalaiyum muriyadiththuth thirumbivarugirabothu, sothomin raajaa purappattu, raajaavin pallaththaakku ennum saavae pallaththaakkumattum avanukku ethirkondubonaan.
Genesis 14:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
- Open Tamil Contemporary Version
- ஆபிராம், கெதர்லாகோமேரையும், அவனுடைய நண்பர்களாகிய அரசர்களையும் தோற்கடித்துத் திரும்பி வந்தபின், சோதோமின் அரசன், ஆபிராமைச் சந்திப்பதற்காக அரச பள்ளத்தாக்கு எனப்படும் சாவே பள்ளத்தாக்கிற்கு வந்தான்.
- Tamil Easy Reading Version
- பிறகு ஆபிராம் கெதர்லாகோமரையும் அவனோடிருந்த அரசர்களையும் தோற்கடித்து விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினான். சோதோமின் அரசன் புறப்பட்டு சாவே பள்ளத்தாக்குக்கு வந்து ஆபிராமை வரவேற்றான். (இப்போது இப்பள்ளத்தாக்கு அரசனின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.)
Genesis 14:17 in English
- King James Version (KJV)
- And the king of Sodom went out to meet him after his return from the slaughter of Chedorlaomer, and of the kings that [were] with him, at the valley of Shaveh, which [is] the king’s dale.
- World English Bible (WEB)
- The king of Sodom went out to meet him after his return from the slaughter of Chedorlaomer and the kings who were with him, at the valley of Shaveh (that is, the King’s Valley).
- American Standard Version (ASV)
- And the king of Sodom went out to meet him, after his return from the slaughter of Chedorlaomer and the kings that were with him, at the vale of Shaveh (the same is the King’s Vale).
- Bible in Basic English (BBE)
- And when he was coming back after putting to flight Chedorlaomer and the other kings, he had a meeting with the king of Sodom in the valley of Shaveh, that is, the King's Valley.
- Darby Translation (DBY)
- And the king of Sodom went out to meet him after he had returned from smiting Chedorlaomer, and the kings that were with him, into the valley of Shaveh, which is the king's valley.
- Webster's Bible (WBS)
- And the king of Sodom went out to meet him after his return from the slaughter of Chedorlaomer, and of the kings that [were] with him, at the valley of Shaveh, which [is] the king's dale.
- Young's Literal Translation (YLT)
- And the king of Sodom goeth out to meet him (after his turning back from the smiting of Chedorlaomer, and of the kings who [are] with him), unto the valley of Shaveh, which [is] the king's valley.
Read in context
- 15இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி,
- 16சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.
- 17அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
- 18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
- 19அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
Cross references
- 2 Samuel 18:18 2 சாமுவேல் 18:18அப்சலோம் உயிரோடே இருக்கையில்: என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்கு தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
- Hebrews 7:1 எபிரெயர் 7:1இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களைமுறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
- Proverbs 19:4 நீதிமொழிகள் 19:4செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும்நெகிழப்படுவான்.
- Proverbs 14:20 நீதிமொழிகள் 14:20தரித்திரன் தனக்கடுத்தவனாலும்பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
- 1 Samuel 18:6 1 சாமுவேல் 18:6தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
- Judges 11:34 நியாயாதிபதிகள் 11:34யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தப்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை.
Original words (Hebrew)
- king · H4428מֶלֶךְ melek
- Sodom · H5467סְדֹם Çᵉdôm
- out · H3318יָצָא yâtsâʼ
- meet · H7125קִרְאָה qirʼâh
- after · H310אַחַר ʼachar
- return · H7725שׁוּב shûwb
- slaughter · H5221נָכָה nâkâh
- Chedorlaomer · H3540כְּדׇרְלָעֹמֶר Kᵉdorlâʻômer
- kings · H4428מֶלֶךְ melek
- valley · H6010עֵמֶק ʻêmeq
- Shaveh · H7740שָׁוֵה Shâvêh
- which · H1931הוּא hûwʼ
- king’s · H4428מֶלֶךְ melek
- dale · H6010עֵמֶק ʻêmeq
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.