Hosea 5:3 in Tamil
எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
Eppiraayeemai naan arivaen, isravael enakku maraivaanathalla; eppiraayeemae, ippothu nee sorambonaayae, isravael theettuppattathae.
Hosea 5:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ வழிவிலகிப்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
- Open Tamil Contemporary Version
- எப்பிராயீமைப்பற்றிய எல்லாவற்றையும் நான் அறிவேன்; இஸ்ரயேலும் என்னிடமிருந்து மறைந்திருக்கவில்லை. ஏனெனில் எப்பிராயீமே, நீ இப்பொழுது வேசித்தனத்திற்கு திரும்பிவிட்டாய்; இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
- Tamil Easy Reading Version
- நான் எப்பிராயீமை அறிவேன். இஸ்ரவேல் செய்திருக்கிற செயல்களையும் நான் அறிவேன். எப்பிராயீமே, இப்பொழுது நீ ஒரு வேசியைப்போல் நடந்துக்கொள்கிறாய். இஸ்ரவேல் பாவங்களால் அழுக்கடைந்தது.
Hosea 5:3 in English
- King James Version (KJV)
- I know Ephraim, and Israel is not hid from me: for now, O Ephraim, thou committest whoredom, [and] Israel is defiled.
- World English Bible (WEB)
- I know Ephraim, and Israel is not hidden from me; for now, Ephraim, you have played the prostitute. Israel is defiled.
- American Standard Version (ASV)
- I know Ephraim, and Israel is not hid from me; for now, O Ephraim, thou hast played the harlot, Israel is defiled.
- Bible in Basic English (BBE)
- I have knowledge of Ephraim, and Israel is not secret from me; for now, O Ephraim, you have been false to me, Israel has become unclean.
- Darby Translation (DBY)
- I know Ephraim, and Israel is not hid from me; for now, Ephraim, thou hast committed whoredom; Israel is defiled.
- Webster's Bible (WBS)
- I know Ephraim, and Israel is not hid from me: for now, O Ephraim, thou art guilty of lewdness, [and] Israel is defiled.
- Young's Literal Translation (YLT)
- I have known Ephraim, And Israel hath not been hid from me, For now thou hast gone a-whoring, Ephraim, Defiled is Israel.
Read in context
- 1ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
- 2நெறிதவறினவர்கள் மிகுதியும் வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லாரையும் நான் தண்டிப்பேன்.
- 3எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
- 4அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத்திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்.
- 5இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான்.
Cross references
- Amos 3:2 ஆமோஸ் 3:2பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்து கொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.
- Hebrews 4:13 எபிரெயர் 4:13அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
- Isaiah 7:5 ஏசாயா 7:5நாம் யூதாவுக்கு விரோதமாய்ப் போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்;
- Hosea 13:1 ஓசியா 13:1எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால்விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.
- Genesis 48:19–20 ஆதியாகமம் 48:19–20அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான். இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.
- Isaiah 7:8–9 ஏசாயா 7:8–9சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்குநொறுங்குண்டுபோம். எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
- Hosea 4:17–18 ஓசியா 4:17–18எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு. அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் சோரம்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று இலச்சையானதை நாடுகிறார்கள்.
- Deuteronomy 33:17 உபாகமம் 33:17அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் தேசத்தின் கடையாந்தரங்கள் மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும்மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
- Amos 5:12 ஆமோஸ் 5:12உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.
- Hosea 8:11 ஓசியா 8:11எப்பிராயீமர் பாவஞ்செய்வதற்கேதுவாய்ப் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.
- 1 Kings 12:26–33 1 இராஜாக்கள் 12:26–33யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்சவசமாய்த் திரும்புகிறதாயிருக்கும். இந்த ஜனஙகள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய்விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள். அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராதஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து, தன் மனதிலே தானே நியமித்துக்கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.
- Ezekiel 23:5–21 எசேக்கியேல் 23:5–21அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள். நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், செளந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்தசமீபதேசத்தாராகிய அசீரியரென்கிறதன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள். தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள். ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரிய புத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன். அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப் பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள். அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள்; தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று. மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், செளந்தரியமுள்ளவாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள். அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்களென்றும் கண்டேன். அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சுரூபங்களைக் கண்டாள். அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவில் உள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும், தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள். அவர்களுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாதிபதிகளை அனுப்பினாள். அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது. இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது. அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள். கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள். எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தானங்களாகிய கொங்கைகள்தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.