Jeremiah 3:24 in Tamil
இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.
Intha ilachaiyaanathu engal siruvayathumuthal engal pithaakkaludaiya pirayaasaththaiyum, avarkal aadugalaiyum maadugalaiyum, avarkal kumaararaiyum kumaaraththigalaiyum patchiththuppottathu.
Jeremiah 3:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்த வெட்கமானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் மகன்களையும் மகள்களையும் அழித்துப்போட்டது.
- Open Tamil Contemporary Version
- எங்கள் வாலிப காலத்திலிருந்து, எங்கள் முற்பிதாக்களின் உழைப்பின் பலனான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும், அவர்களின் மகன்களையும், மகள்களையும் வெட்கக்கேடான தெய்வங்கள் விழுங்கிவிட்டன.
- Tamil Easy Reading Version
- அந்தப் பயங்கரமான பாகால் என்னும் பொய்த் தெய்வம், எங்கள் தந்தைக்கு சொந்தமானவற்றைத் தின்றது. நாங்கள் சிறுவர்களாக இருந்தது முதல் இது நடக்கிறது. அந்தப் பயங்கரமான பொய்த் தெய்வங்கள் எங்கள் தந்தைகளின் ஆடுகளையும் மாடுகளையும், அவர்களின் மகன்களையும், மகள்களையும், எடுத்துக்கொண்டது.
Jeremiah 3:24 in English
- King James Version (KJV)
- For shame hath devoured the labour of our fathers from our youth; their flocks and their herds, their sons and their daughters.
- World English Bible (WEB)
- But the shameful thing has devoured the labor of our fathers from our youth, their flocks and their herds, their sons and their daughters.
- American Standard Version (ASV)
- But the shameful thing hath devoured the labor of our fathers from our youth, their flocks and their herds, their sons and their daughters.
- Bible in Basic English (BBE)
- But the Baal has taken all the work of our fathers from our earliest days; their flocks and their herds, their sons and their daughters.
- Darby Translation (DBY)
- But shame hath devoured the labour of our fathers from our youth; their flocks and their herds, their sons and their daughters.
- Webster's Bible (WBS)
- For shame hath devoured the labor of our fathers from our youth; their flocks and their herds, their sons and their daughters.
- Young's Literal Translation (YLT)
- And the shameful thing hath devoured The labour of our fathers from our youth, Their flock and their herd, Their sons and their daughters.
Read in context
- 22சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்.
- 23குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பதுமெய்யே.
- 24இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.
- 25எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம்.
Cross references
- Hosea 9:10 ஓசியா 9:10வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக்கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல் தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.
- Hosea 10:6 ஓசியா 10:6அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல் தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான்.
- Ezekiel 16:61 எசேக்கியேல் 16:61அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.
- Hosea 2:8 ஓசியா 2:8தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.
- Ezekiel 16:63 எசேக்கியேல் 16:63நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
- Jeremiah 11:13 எரேமியா 11:13யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.