Jeremiah 38:6 in Tamil
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
Appozhuthu avarkal eraemiyaavaip pidiththu, avanaik kaavarsaalaiyin mutraththiliruntha ammelaegin kumaaranaagiya malkiyaavinudaiya thuravilae pottaarkal; eraemiyaavaik kayirugalinaal athilae irakkivittaarkal; anthath thuravilae thanneer illaamal ulaiyaayirunthathu, antha ulaiyilae eraemiyaa amizhnthinaan.
Jeremiah 38:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் மகனாகிய மல்கியாவினுடைய கிணற்றில் போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதில் இறக்கிவிட்டார்கள்; அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் சேறாயிருந்தது, அந்த சேற்றில் எரேமியா புதைந்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அவர்கள் எரேமியாவைக் காவற்கூட முற்றத்திலிருந்த அரசனின் மகன் மல்கியாவின் குழிக்குள் போட்டார்கள். அவர்கள் எரேமியாவை கயிறுகளினால் கட்டி அதற்குள் இறக்கினார்கள். அதில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றிற்குள்ளே புதைந்து கொண்டிருந்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே, அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கொண்டுப்போய் மல்கியாவின் தண்ணீர்க்குழியில் அடைத்தனர். (மல்கியா அரசனின் மகன்). அந்த தண்ணீர்க்குழி ஆலயப் பிரகாரத்தில் அரசனின் காவலர்கள் தங்கும் இடத்தில் இருந்தது. அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கயிற்றில் கட்டி தண்ணீர்க்குழியில் இறக்கினார்கள். அந்த தண்ணீர்க்குழியில் தண்ணீர் எதுவுமில்லை. ஆனால் சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றுக்குள் புதைந்தான்.
Jeremiah 38:6 in English
- King James Version (KJV)
- Then took they Jeremiah, and cast him into the dungeon of Malchiah the son of Hammelech, that [was] in the court of the prison: and they let down Jeremiah with cords. And in the dungeon [there was] no water, but mire: so Jeremiah sunk in the mire.
- World English Bible (WEB)
- Then they took Jeremiah and threw him into the dungeon of Malchijah the king’s son, that was in the court of the guard. They let down Jeremiah with cords. In the dungeon there was no water, but mire; and Jeremiah sank in the mire.
- American Standard Version (ASV)
- Then took they Jeremiah, and cast him into the dungeon of Malchijah the king’s son, that was in the court of the guard: and they let down Jeremiah with cords. And in the dungeon there was no water, but mire; and Jeremiah sank in the mire.
- Bible in Basic English (BBE)
- So they took Jeremiah and put him into the water-hole of Malchiah, the king's son, in the place of the armed watchmen: and they let Jeremiah down with cords. And in the hole there was no water, but wet earth: and Jeremiah went down into the wet earth.
- Darby Translation (DBY)
- Then they took Jeremiah, and cast him into the dungeon of Malchijah the son of Hammelech, which was in the court of the guard, and they let down Jeremiah with cords. And in the dungeon there was no water, but mire; and Jeremiah sank in the mire.
- Webster's Bible (WBS)
- Then they took Jeremiah, and cast him into the dungeon of Malchiah the son of Hammelech, that [was] in the court of the prison: and they let down Jeremiah with cords. And in the dungeon [there was] no water, but mire: so Jeremiah sunk in the mire.
- Young's Literal Translation (YLT)
- And they take Jeremiah, and cast him into the pit of Malchiah son of the king, that [is] in the court of the prison, and they send down Jeremiah with cords; and in the pit there is no water, but mire, and Jeremiah sinketh in the mire.
Read in context
- 4அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்தமனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் சேஷமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.
- 5அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான்.
- 6அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
- 7அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.
- 8அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி:
Cross references
- Jeremiah 37:21 எரேமியா 37:21அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்.
- Psalm 69:14–15 சங்கீதம் 69:14–15நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கி விடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும்நான் நீங்கும்படி செய்யும். ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.
- Psalm 69:2 சங்கீதம் 69:2ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
- Jeremiah 37:16 எரேமியா 37:16அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.
- Jeremiah 38:22 எரேமியா 38:22இதோ, யூதா ராஜாவின் வீட்டிலே மீதியான எல்லா ஸ்திரீகளும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள்தானே உம்முடைய இஷ்டர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் உளையிலே அமிழ்ந்தினபின்பு அவர்கள் பின்வாங்கிப்போனார்கள் என்றும் அந்த ஸ்திரீகளே சொல்லுவார்கள்.
- Genesis 37:24 ஆதியாகமம் 37:24அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
- Psalm 40:2 சங்கீதம் 40:2பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
- Psalm 109:5 சங்கீதம் 109:5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
- Zechariah 9:11 சகரியா 9:11உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.
- Acts 16:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:24அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.
- Lamentations 3:52–55 புலம்பல் 3:52–55முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள். காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள். தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன். மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன்.
- 2 Corinthians 4:8–9 2 கொரிந்தியர் 4:8–9நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
Original words (Hebrew)
- took · H3947לָקַח lâqach
- Jeremiah · H3414יִרְמְיָה Yirmᵉyâh
- cast · H7993שָׁלַךְ shâlak
- dungeon · H953בּוֹר bôwr
- Malchiah · H4441מַלְכִּיָּה Malkîyâh
- son · H1121בֵּן bên
- Hammelech · H4428מֶלֶךְ melek
- court · H2691חָצֵר châtsêr
- prison · H4307מַטָּרָא maṭṭârâʼ
- down · H7971שָׁלַח shâlach
- Jeremiah · H3414יִרְמְיָה Yirmᵉyâh
- cords · H2256חֶבֶל chebel
- dungeon · H953בּוֹר bôwr
- water · H4325מַיִם mayim
- mire · H2916טִיט ṭîyṭ
- Jeremiah · H3414יִרְמְיָה Yirmᵉyâh
- sunk · H2883טָבַע ṭâbaʻ
- mire · H2916טִיט ṭîyṭ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.