Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 42:18 in Tamil

என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக் காணாதிருப்பீர்கள்என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

En kobamum en ukkiramum erusalaemin kudigalmael eppadi moondatho, appadiyae en ukkiram neengal egipthukkup pogumbothu, ungalmael moolum; neengal saabamaagavum paazhaagavum pazhippaagavum ninthaiyaagavum irunthu, ivvidaththai inik kaanaathiruppeerkalendru isravaelin thaevanaagiya saenaigalin karththar sollugiraar.

Download verse image

Jeremiah 42:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் கோபமும் என் கடுங்கோபமும் எருசலேமின் குடிமக்கள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் கடுங்கோபம் நீங்கள் எகிப்திற்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக் காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வதாவது: ‘எருசலேமில் வாழ்ந்தவர்கள் மீது என் கோபமும், கடுங்கோபமும் ஊற்றப்பட்டதுபோல, நீங்களும் எகிப்திற்குப் போகும்போது என் கடுங்கோபம் உங்கள்மீது ஊற்றப்படும். நீங்கள் சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், கண்டிப்புக்கும், அவமானத்திற்கும் ஆளாவீர்கள். இந்த இடத்தை நீங்கள் இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்.’
Tamil Easy Reading Version
“இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘எருசலேமிற்கு எதிராக கோபத்தை நான் காண்பித்தேன். எருசலேமில் வாழ்ந்த ஜனங்களை நான் தண்டித்தேன். அதே வழியில் எகிப்திற்குச் செல்கிற ஒவ்வொருவரிடமும் எனது கோபத்தைக் காட்டுவேன். மற்றவர்களுக்குத் தீமை ஏற்படுவதைப்பற்றி ஜனங்கள் பேசும்போது உங்களை சான்றாகக் காட்டுவார்கள். நீங்கள் ஒரு சாப வார்த்தைப்போன்று ஆவீர்கள். ஜனங்கள் உங்களை எண்ணி அவமானம் அடைவார்கள். ஜனங்கள் உங்களை நிந்திப்பார்கள். நீங்கள் யூதாவை மீண்டும் பார்க்கமாட்டீர்கள்.’

Jeremiah 42:18 in English

King James Version (KJV)
For thus saith the LORD of hosts, the God of Israel; As mine anger and my fury hath been poured forth upon the inhabitants of Jerusalem; so shall my fury be poured forth upon you, when ye shall enter into Egypt: and ye shall be an execration, and an astonishment, and a curse, and a reproach; and ye shall see this place no more.
World English Bible (WEB)
For the LORD of Armies, the God of Israel, says: ‘As my anger and my wrath has been poured out on the inhabitants of Jerusalem, so my wrath will be poured out on you, when you enter into Egypt; and you will be an object of horror, an astonishment, a curse, and a reproach; and you will see this place no more.’
American Standard Version (ASV)
For thus saith Jehovah of hosts, the God of Israel: As mine anger and my wrath hath been poured forth upon the inhabitants of Jerusalem, so shall my wrath be poured forth upon you, when ye shall enter into Egypt; and ye shall be an execration, and an astonishment, and a curse, and a reproach; and ye shall see this place no more.
Bible in Basic English (BBE)
For this is what the Lord of armies, the God of Israel, has said: As my wrath and passion have been let loose on the people of Jerusalem, so will my passion be let loose on you when you go into Egypt: and you will become an oath and a cause of wonder and a curse and a name of shame; and you will never see this place again.
Darby Translation (DBY)
For thus saith Jehovah of hosts, the God of Israel: As mine anger and my fury have been poured forth upon the inhabitants of Jerusalem, so shall my fury be poured forth upon you, when ye shall enter into Egypt; and ye shall be an execration, and an astonishment, and a curse, and a reproach, and ye shall see this place no more.
Webster's Bible (WBS)
For thus saith the LORD of hosts, the God of Israel; As my anger and my fury hath been poured forth upon the inhabitants of Jerusalem: so shall my fury be poured forth upon you, when ye shall enter into Egypt: and ye shall be an execration, and an astonishment, and a curse, and a reproach; and ye shall see this place no more.
Young's Literal Translation (YLT)
for thus said Jehovah of Hosts, God of Israel: As poured out hath been Mine anger and My fury on the inhabitants of Jerusalem, so poured out is My fury upon you in your entering Egypt, and ye have been for an execration, and for an astonishment, and for a reviling, and for a reproach, and ye do not see any more this place.

Read in context

  1. 16நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்து வரும், அங்கே சாவீர்கள்.
  2. 17எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
  3. 18என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக் காணாதிருப்பீர்கள்என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
  4. 19யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள்என்றுகர்த்தர் உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.
  5. 20உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த் தரைநோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகியகர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள்.
Read all of Jeremiah 42

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.