Jeremiah 49:26 in Tamil
ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Aathalaal athin vaalibar athin veethigalil vizhunthu, yuththamanushar ellaarum annaalilae sangaaramaavaarkal endru saenaigalin karththar sollugiraar.
Jeremiah 49:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, போர் வீரர்கள் எல்லோரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
- Open Tamil Contemporary Version
- நிச்சயமாக அதன் வாலிபர்கள் தெருக்களில் விழுவார்கள். அந்நாளில் எல்லாப் போர்வீரர்களும் அழிக்கப்படுவார்கள் என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
- Tamil Easy Reading Version
- எனவே, இளைஞர்கள் நகரின் பொதுச் சதுரங்களில் மரிப்பார்கள். அந்த நேரத்தில் அவளது வீரர்கள் எல்லோரும் கொல்லப்படுவார்கள்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
Jeremiah 49:26 in English
- King James Version (KJV)
- Therefore her young men shall fall in her streets, and all the men of war shall be cut off in that day, saith the LORD of hosts.
- World English Bible (WEB)
- Therefore her young men will fall in her streets, and all the men of war will be brought to silence in that day,” says the LORD of Armies.
- American Standard Version (ASV)
- Therefore her young men shall fall in her streets, and all the men of war shall be brought to silence in that day, saith Jehovah of hosts.
- Bible in Basic English (BBE)
- So her young men will be falling in her streets, and all the men of war will be cut off in that day, says the Lord of armies.
- Darby Translation (DBY)
- Therefore shall her young men fall in her streets, and all the men of war be cut off in that day, saith Jehovah of hosts.
- Webster's Bible (WBS)
- Therefore her young men shall fall in her streets, and all the men of war shall be cut off in that day, saith the LORD of hosts.
- Young's Literal Translation (YLT)
- Therefore fall do her young men in her broad places, And all the men of war are cut off in that day, An affirmation of Jehovah of Hosts.
Read in context
- 24தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம்; திகில் அதைப் பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.
- 25சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பவிடப்படாமற்போயிற்றே!
- 26ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- 27தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்.
- 28பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய ராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழுப்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப் புத்திரரைப் பாழாக்குங்கள்.
Cross references
- Jeremiah 50:30 எரேமியா 50:30ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Amos 4:10 ஆமோஸ் 4:10எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Jeremiah 11:22 எரேமியா 11:22இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.
- Ezekiel 27:27 எசேக்கியேல் 27:27நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும், உன் சந்தைகளோடும், உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும், உன் மாலுமிகளும், உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லாயுத்தவீரரும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்.
- Lamentations 2:21 புலம்பல் 2:21இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.
- Jeremiah 9:21 எரேமியா 9:21வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
- Jeremiah 51:3–4 எரேமியா 51:3–4வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள். குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலைசெய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.