Jeremiah 50:29 in Tamil
பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள், ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது.
Paabilonukku virothamaay varumbadi vilveerarai azhaiyungal; vil valaikkiravarkalae, neengal ellaarum atharku virothamaays sutrilum paalayamirangungal, oruvaraiyum thappavidaathirungal; athin kiriyaikkuththakka palanai atharkus sarikkattungal; athu seythathinpadiyellaam atharkus seyyungal; athu isravaelin parisuththaraagiya karththarukku virothamaaga idumbuseythathu.
Jeremiah 50:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் முகாமிடுங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் செயலுக்குத்தக்கபலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவுக்கு விரோதமாக இடும்பு செய்தது.
- Open Tamil Contemporary Version
- வில்வீரர்களை அழைப்பியுங்கள். வில் வளைக்கும் யாவரையும் பாபிலோனுக்கு விரோதமாக அழைப்பியுங்கள். அவளைச்சுற்றி முகாமிட்டு ஒருவரையும் தப்பவிடாதிருங்கள். அவள் செய்த செய்கைகளுக்குத்தக்க பலனைக் கொடுங்கள்; அவள் செய்தவாறே அவளுக்கும் செய்யுங்கள். ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரான யெகோவாவுக்கு விரோதமாய் அவள் எதிர்த்து நின்றாள்.
- Tamil Easy Reading Version
- “அம்புகளை எய்யும் ஆட்களைக் கூப்பிடு. பாபிலோனைத் தாக்கும்படி அவர்களிடம் சொல். நகரத்தை முற்றுகையிடும்படி அவர்களிடம் சொல். எவரையும் தப்பிக்கவிடாதே. அவள் செய்த தீமைக்கு, திருப்பிக்கொடுங்கள். அவள் மற்ற தேசங்களுக்கு எவற்றைச் செய்தாளோ அவற்றை அவளுக்குச் செய்யுங்கள். பாபிலோன் கர்த்தருக்கு மரியாதை செய்யவில்லை. பாபிலோன் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டது. எனவே பாபிலோனைத் தண்டித்துவிடு.
Jeremiah 50:29 in English
- King James Version (KJV)
- Call together the archers against Babylon: all ye that bend the bow, camp against it round about; let none thereof escape: recompense her according to her work; according to all that she hath done, do unto her: for she hath been proud against the LORD, against the Holy One of Israel.
- World English Bible (WEB)
- “Call together the archers against Babylon, all those who bend the bow. Encamp against her all around. Let none of it escape. Pay her back according to her work. According to all that she has done, do to her; for she has been proud against the LORD, against the Holy One of Israel.
- American Standard Version (ASV)
- Call together the archers against Babylon, all them that bend the bow; encamp against her round about; let none thereof escape: recompense her according to her work; according to all that she hath done, do unto her; for she hath been proud against Jehovah, against the Holy One of Israel.
- Bible in Basic English (BBE)
- Send for the archers to come together against Babylon, all the bowmen; put up your tents against her on every side; let no one get away: give her the reward of her work; as she has done, so do to her: for she has been uplifted in pride against the Lord, against the Holy One of Israel.
- Darby Translation (DBY)
- Call together the archers against Babylon, all those that bend the bow: encamp against her round about; let there be no escaping: recompense her according to her work; according to all that she hath done, do unto her: for she hath acted proudly against Jehovah, against the Holy One of Israel.
- Webster's Bible (WBS)
- Call together the archers against Babylon: all ye that bend the bow, encamp against it on every side; let none thereof escape: recompense her according to her work; according to all that she hath done, do to her: for she hath been proud against the LORD, against the Holy One of Israel.
- Young's Literal Translation (YLT)
- Summon unto Babylon archers, all treading the bow, Encamp against her round about, Let [her] have no escape; Recompense to her according to her work, According to all that she did — do to her, For unto Jehovah she hath been proud, Unto the Holy One of Israel.
Read in context
- 27அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக் கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
- 28நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடிவந்தவர்களின்சத்தம் கேட்கப்படும்.
- 29பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள், ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது.
- 30ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 31இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
Cross references
- Jeremiah 51:56 எரேமியா 51:56பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.
- Isaiah 47:10 ஏசாயா 47:10உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன்ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான் தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.
- Revelation 18:6 வெளிப்படுத்தின விசேஷம் 18:6அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.
- Daniel 4:37 தானியேல் 4:37ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
- Exodus 10:3 யாத்திராகமம் 10:3அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு.
- Jeremiah 50:14–15 எரேமியா 50:14–15நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது. அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
- Isaiah 37:23 ஏசாயா 37:23யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.
- Jeremiah 50:9 எரேமியா 50:9இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை.
- Isaiah 14:13–14 ஏசாயா 14:13–14நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
- Revelation 13:5–6 வெளிப்படுத்தின விசேஷம் 13:5–6பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.
- Revelation 16:6 வெளிப்படுத்தின விசேஷம் 16:6அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.
- Jeremiah 50:26 எரேமியா 50:26கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
Original words (Hebrew)
- together · H8085שָׁמַע shâmaʻ
- archers · H7228רַב rab
- Babylon · H894בָּבֶל Bâbel
- bend · H1869דָּרַךְ dârak
- bow · H7198קֶשֶׁת qesheth
- camp · H2583חָנָה chânâh
- about · H5439סָבִיב çâbîyb
- escape · H6413פְּלֵיטָה pᵉlêyṭâh
- recompense · H7999שָׁלַם shâlam
- work · H6467פֹּעַל pôʻal
- done · H6213עָשָׂה ʻâsâh
- do · H6213עָשָׂה ʻâsâh
- proud · H2102זוּד zûwd
- One · H6918קָדוֹשׁ qâdôwsh
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.