Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 22:20 in Tamil

சேராவின் குமாரனாகிய ஆகான் சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே இஸ்ரவேல் சபையின்மேலெல்லாம் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.

Saeraavin kumaaranaagiya aagaan saabaththeedaana porulaikkuriththuth thurogambanninathinaalae isravael sabaiyinmaelellaam kadungobam varavillaiyaa? avan oruvanmaaththiram than akkiramaththinaalae madinthubogavillaiyendru karththarudaiya sabaiyaar ellaarum sollachonnaarkal endraarkal.

Download verse image

Joshua 22:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
சேராவின் மகனாகிய ஆகான் சாபத்தீடானப் பொருளைக்குறித்துத் துரோகம்செய்ததினாலே, இஸ்ரவேல் மக்களின்மேல் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மட்டும் தன்னுடைய அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று யெகோவாவுடைய சபையார்கள் எல்லோரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
முன்னர் சேராவின் மகனாகிய ஆகான் யெகோவாவுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களின் விஷயத்தில் நம்பிக்கைத் துரோகமாக நடந்தபோது, இறைவனின் கோபம் இஸ்ரயேல் சமுதாயம் முழுவதன் மேலும் வரவில்லையோ? அவனுடைய பாவத்திற்காக அவன் மட்டும் சாகவில்லையே’ ” என்றார்கள்.
Tamil Easy Reading Version
“சேராவின் மகனாகிய ஆகான் என்ற மனிதனை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அழிக்கப் படவேண்டிய பொருட்களைப் பற்றிய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவன் மறுத்தான். அந்த ஒரு மனிதன் தேவனின் கட்டளையை மீறினான், ஆனால் இஸ்ரவேலர் எல்லோரும் தண்டிக்கப்பட்டனர். ஆகான் தன் பாவத்திற்காக மரித்தான். ஆனால் மற்றும் பலரும் மரிக்க நேரிட்டது” என்று எல்லா இஸ்ரவேலரும் உங்களிடம் கேட்கிறார்கள் என்றனர்.

Joshua 22:20 in English

King James Version (KJV)
Did not Achan the son of Zerah commit a trespass in the accursed thing, and wrath fell on all the congregation of Israel? and that man perished not alone in his iniquity.
World English Bible (WEB)
Didn’t Achan the son of Zerah commit a trespass in the devoted thing, and wrath fell on all the congregation of Israel? That man didn’t perish alone in his iniquity.’”
American Standard Version (ASV)
Did not Achan the son of Zerah commit a trespass in the devoted thing, and wrath fell upon all the congregation of Israel? and that man perished not alone in his iniquity.
Bible in Basic English (BBE)
Did not Achan, the son of Zerah, do wrong about the cursed thing, causing wrath to come on all the people of Israel? And not on him only came the punishment of death.
Darby Translation (DBY)
Did not Achan the son of Zerah commit a trespass in the accursed thing? and wrath fell on all the assembly of Israel, and he perished not alone in his iniquity.
Webster's Bible (WBS)
Did not Achan the son of Zerah commit a trespass in the accursed thing, and wrath fall on all the congregation of Israel? and that man perished not alone in his iniquity.
Young's Literal Translation (YLT)
Did not Achan son of Zerah commit a trespass in the devoted thing, and on all the company of Israel there was wrath? and he alone expired not in his iniquity.'

Read in context

  1. 18நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின் பற்றாதபடிக்குப் புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணுவீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே.
  2. 19உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.
  3. 20சேராவின் குமாரனாகிய ஆகான் சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே இஸ்ரவேல் சபையின்மேலெல்லாம் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
  4. 21அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலின் ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக:
  5. 22தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.
Read all of Joshua 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.