Judges 13:16 in Tamil
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.
Karththarudaiya thoothanaanavar manovaavai nokki: nee ennai irukkas sonnaalum naan un unavaip pusiyaen; nee sarvaanga thaganabali idavaendumaanaal, athai nee karththarukkus seluththuvaayaaga endraar. avar karththarudaiya thoothan endru manovaa ariyaathirunthaan.
Judges 13:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன்னுடைய உணவை சாப்பிடமாட்டேன்; நீ சர்வாங்க தகனபலி செலுத்தவேண்டுமானால், அதை நீ யெகோவாவுக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் யெகோவாவுடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு யெகோவாவின் தூதனானவர், “நீ என்னைத் தடுத்தாலும் நான் உனது உணவில் எதையும் சாப்பிடமாட்டேன். ஆனால் நீ தகன காணிக்கையை ஆயத்தம் செய்தால், அதை யெகோவாவுக்கு செலுத்து” என்றார். மனோவாவோ அவரை யெகோவாவின் தூதனானவர் என்று உணராமல் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “நீங்கள் இருக்குமாறு கூறினாலும் உங்கள் உணவை உண்ணமாட்டேன். நீங்கள் ஏதேனும் தயாரிக்க விரும்பினால் கர்த்தருக்குத் தகனபலி கொடுங்கள்” என்றான். (மனோவா உண்மையிலேயே அவன் கர்த்தருடைய தூதன் என்பதை அறியாதிருந்தான்.)
Judges 13:16 in English
- King James Version (KJV)
- And the angel of the LORD said unto Manoah, Though thou detain me, I will not eat of thy bread: and if thou wilt offer a burnt offering, thou must offer it unto the LORD. For Manoah knew not that he [was] an angel of the LORD.
- World English Bible (WEB)
- The LORD’s angel said to Manoah, “Though you detain me, I won’t eat your bread. If you will prepare a burnt offering, you must offer it to the LORD.” For Manoah didn’t know that he was the LORD’s angel.
- American Standard Version (ASV)
- And the angel of Jehovah said unto Manoah, Though thou detain me, I will not eat of thy bread; and if thou wilt make ready a burnt-offering, thou must offer it unto Jehovah. For Manoah knew not that he was the angel of Jehovah.
- Bible in Basic English (BBE)
- And the angel of the Lord said to Manoah, Though you keep me I will not take of your food; but if you will make a burned offering, let it be offered to the Lord. For it had not come into Manoah's mind that he was the angel of the Lord.
- Darby Translation (DBY)
- And the Angel of Jehovah said to Manoah, Though thou shouldest detain me, I will not eat of thy bread; and if thou wilt offer a burnt-offering, thou shalt offer it up to Jehovah. For Manoah knew not that he was the Angel of Jehovah.
- Webster's Bible (WBS)
- And the angel of the LORD said to Manoah, Though thou shouldst detain me, I will not eat of thy bread: and if thou wilt offer a burnt-offering, thou must offer it to the LORD. For Manoah knew not that he [was] an angel of the LORD.
- Young's Literal Translation (YLT)
- And the messenger of Jehovah saith unto Manoah, 'If thou detain me — I do not eat of thy bread; and if thou prepare a burnt-offering — to Jehovah thou dost offer it;' for Manoah hath not known that He [is] a messenger of Jehovah.
Read in context
- 14திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.
- 15அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச்சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.
- 16கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.
- 17அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.
- 18அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
Cross references
- Judges 13:23 நியாயாதிபதிகள் 13:23அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.
- Judges 6:20 நியாயாதிபதிகள் 6:20அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து, ஆணத்தை ஊற்று என்றார்; அவன்அப்படியே செய்தான்.
- Judges 6:26 நியாயாதிபதிகள் 6:26இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டுவந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின்மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.
Original words (Hebrew)
- angel · H4397מֲלְאָךְ mălʼâk
- said · H559אָמַר ʼâmar
- Manoah · H4495מָנוֹחַ Mânôwach
- detain · H6113עָצָר ʻâtsâr
- eat · H398אָכַל ʼâkal
- bread · H3899לֶחֶם lechem
- if · H518אִם ʼim
- offer · H6213עָשָׂה ʻâsâh
- offering · H5930עֹלָה ʻôlâh
- offer · H5927עָלָה ʻâlâh
- Manoah · H4495מָנוֹחַ Mânôwach
- knew · H3045יָדַע yâdaʻ
- angel · H4397מֲלְאָךְ mălʼâk
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.