Judges 18:9 in Tamil
அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள்.
Atharku avarkal: ezhumbungal, avarkalukku virothamaayp povom vaarungal; antha thaesaththaip paarththom, athu migavum nandraayirukkirathu, neengal summaayiruppeerkalaa? antha thaesaththais suthanthariththukkollumbadi purappattuppoga asathiyaayiraathaeyungal.
Judges 18:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு எதிராகப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் கைப்பற்றிக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாக இருக்கவேண்டாம்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு அவர்கள், “வாருங்கள்! நாம் அவர்களைத் தாக்குவோம்; அந்த நாடு மிகவும் செழிப்புள்ளதெனக் கண்டோம். நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருக்கப்போகிறீர்களோ? அங்குபோய் அதைக் கைப்பற்றத் தயங்கவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- அவர்கள், “நாங்கள் ஒரு இடத்தைப் பார்த்து வந்திருக்கிறோம். அது மிகவும் நன்றாக இருக்கிறது. நாம் அதைத் தாக்கவேண்டும். காத்திருக்கக் கூடாது, நாம் போய், அத்தேசத்தை கைப்பற்றுவோம்!
Judges 18:9 in English
- King James Version (KJV)
- And they said, Arise, that we may go up against them: for we have seen the land, and, behold, it [is] very good: and [are] ye still? be not slothful to go, [and] to enter to possess the land.
- World English Bible (WEB)
- They said, “Arise, and let’s go up against them; for we have seen the land, and behold, it is very good. Do you stand still? Don’t be slothful to go and to enter in to possess the land.
- American Standard Version (ASV)
- And they said, Arise, and let us go up against them; for we have seen the land, and, behold, it is very good: and are ye still? be not slothful to go and to enter in to possess the land.
- Bible in Basic English (BBE)
- And they said, Up! and let us go against Laish; for we have seen the land, and it is very good: why are you doing nothing? Do not be slow to go in and take the land for your heritage.
- Darby Translation (DBY)
- And they said, Arise, and let us go up against them; for we have seen the land, and behold, it is very good; and ye are still! Be not slothful to go, to enter to take possession of the land.
- Webster's Bible (WBS)
- And they said, Arise, that we may go up against them: for we have seen the land, and behold, it [is] very good: and [are] ye still? be not slothful to go, [and] to enter to possess the land.
- Young's Literal Translation (YLT)
- And they say, 'Rise, and we go up against them, for we have seen the land, and lo, very good; and ye are keeping silent! be not slothful to go — to enter to possess the land.
Read in context
- 7அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத்தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு,
- 8சோராவிலும் எஸ்தாவோவிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.
- 9அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள்.
- 10நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.
- 11அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண்கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,
Cross references
- Joshua 2:23–24 யோசுவா 2:23–24அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து; கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்கு முன்பாகச் சோர்ந்து போனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.
- Numbers 13:30 எண்ணாகமம் 13:30அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி; நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.
- Joshua 18:3 யோசுவா 18:3ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள்.
- John 6:27 யோவான் 6:27அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
- 2 Peter 1:10–11 2 பேதுரு 1:10–11ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
- 1 Kings 22:23 1 இராஜாக்கள் 22:23ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார், கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
- Hebrews 6:11–12 எபிரெயர் 6:11–12நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
- 1 Kings 22:3 1 இராஜாக்கள் 22:3இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,
- 2 Samuel 10:12 2 சாமுவேல் 10:12தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும் நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக்காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
- 1 Samuel 4:9 1 சாமுவேல் 4:9பெலிஸ்தரே, திடன்கொண்டு புருஷரைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து யுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
- Numbers 14:7–9 எண்ணாகமம் 14:7–9இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம்கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.
Original words (Hebrew)
- said · H559אָמַר ʼâmar
- Arise · H6965קוּם qûwm
- up · H5927עָלָה ʻâlâh
- seen · H7200רָאָה râʼâh
- land · H776אֶרֶץ ʼerets
- very · H3966מְאֹד mᵉʼôd
- good · H2896טוֹב ṭôwb
- still · H2814חָשָׁה châshâh
- slothful · H6101עָצַל ʻâtsal
- go · H3212יָלַךְ yâlak
- enter · H935בּוֹא bôwʼ
- possess · H3423יָרַשׁ yârash
- land · H776אֶרֶץ ʼerets
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.