Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 2:15 in Tamil

வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வ பூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

Vazhippokkar yaavarum unpaeril kai kottugiraarkal; erusalaem kumaaraththiyinpaeril eesarpottu, thangal thalaigalaith thulukki: pooranavadivum sarva poomiyin magizhchiyumaana nagaram ithuthaanaa engiraarkal.

Lamentations 2:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து, கேலியாக தங்கள் தலைகளை அசைத்து: பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும், உன்னைப் பார்த்து தங்கள் கைகளைத் தட்டுகிறார்கள்; எருசலேம் மகளைப் பார்க்கிறவர்கள் கேலிசெய்து தங்கள் தலைகளை அசைத்துச் சொல்கிறதாவது: “அழகின் நிறைவு என்றும், பூமி முழுவதற்கும் மகிழ்ச்சி என்றும் அழைக்கப்பட்ட நகரம் இதுதானா?”
Tamil Easy Reading Version
சாலையில் உன்னைக் கடந்துபோகும் ஜனங்கள் உன்னைப் பார்த்து கைதட்டுகிறார்கள். அவர்கள் பிரமித்து எருசலேம் மகளைப் பார்த்து தலையாட்டுகிறார்கள். அவர்கள், “இதுதானா, ‘முழுமையான அழகுடைய நகரம்’ ‘பூமியிலே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பது’ என்று ஜனங்களால் அழைக்கப்பட்ட நகரம்?” என்று கேட்கிறார்கள்.

Lamentations 2:15 in English

King James Version (KJV)
All that pass by clap [their] hands at thee; they hiss and wag their head at the daughter of Jerusalem, [saying, Is] this the city that [men] call The perfection of beauty, The joy of the whole earth?
World English Bible (WEB)
All that pass by clap their hands at you. They hiss and wag their head at the daughter of Jerusalem, saying, “Is this the city that men called ‘The perfection of beauty, the joy of the whole earth’?”
American Standard Version (ASV)
All that pass by clap their hands at thee; They hiss and wag their head at the daughter of Jerusalem, [saying], Is this the city that men called The perfection of beauty, The joy of the whole earth?
Bible in Basic English (BBE)
All who go by make a noise with their hands at you; they make hisses, shaking their heads at the daughter of Jerusalem, and saying, Is this the town which was the crown of everything beautiful, the joy of all the earth?
Darby Translation (DBY)
All that pass by clap [their] hands at thee; they hiss and shake their head at the daughter of Jerusalem: Is this the city which they called, The perfection of beauty, The joy of the whole earth?
Webster's Bible (WBS)
All that pass by, clap [their] hands at thee; they hiss and wag their head at the daughter of Jerusalem, [saying] , [Is] this the city that [men] call the Perfection of beauty, the Joy of the whole earth?
Young's Literal Translation (YLT)
Clapped hands at thee have all passing by the way, They have hissed — and they shake the head At the daughter of Jerusalem: 'Is this the city of which they said: The perfection of beauty, a joy to all the land?'

Read in context

  1. 13எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
  2. 14உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும்வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்.
  3. 15வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வ பூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
  4. 16உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
  5. 17கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.
Read all of Lamentations 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.