Matthew 12:5 in Tamil
அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
Andriyum, oyvunaadkalil aasaariyarkal thaevaalayaththil oynthiraamal, oyvunaalai vaelai naalaakkinaalum, kutramillaathirukkiraarkal endru neengal vaethaththil vaasikkavillaiyaa?
Matthew 12:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
- Open Tamil Contemporary Version
- மேலும், ஆசாரியர்கள் ஓய்வுநாளில் ஆலயத்திலுள்ள தங்கள் வேலையினால் ஓய்வுநாளையே வேலை நாளாக்கினாலும் குற்றமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மோசேயின் சட்டத்தில் வாசிக்கவில்லையா?
- Tamil Easy Reading Version
- நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் படித்திருக்கிறீர்கள். அதாவது ஓய்வு நாளில் ஆலயங்களில் ஆசாரியர்கள் ஓய்வு கொள்ளாமல் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்று. ஆனால், அவ்வாறு செய்யும் ஆசாரியர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல.
Matthew 12:5 in English
- King James Version (KJV)
- Or have ye not read in the law, how that on the sabbath days the priests in the temple profane the sabbath, and are blameless?
- World English Bible (WEB)
- Or have you not read in the law that on the Sabbath day the priests in the temple profane the Sabbath and are guiltless?
- American Standard Version (ASV)
- Or have ye not read in the law, that on the sabbath day the priests in the temple profane the sabbath, and are guiltless?
- Bible in Basic English (BBE)
- Or is it not said in the law, how the Sabbath is broken by the priests in the Temple and they do no wrong?
- Darby Translation (DBY)
- Or have ye not read in the law that on the sabbaths the priests in the temple profane the sabbath, and are blameless?
- Webster's Bible (WBS)
- Or have ye not read in the law, that on the sabbath the priests in the temple profane the sabbath, and are blameless?
- Young's Literal Translation (YLT)
- 'Or did ye not read in the Law, that on the sabbaths the priests in the temple do profane the sabbath, and are blameless?
Read in context
- 3அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
- 4அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும்புசித்தார்களே.
- 5அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
- 6தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- 7பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
Cross references
- Numbers 28:9–10 எண்ணாகமம் 28:9–10ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். நித்தமும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.
- John 7:22–23 யோவான் 7:22–23விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள். மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?