Matthew 5:15 in Tamil
விளக்கைக் கொளுத்தி மரக்காலால்மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
Vilakkaik koluththi marakkaalaalmoodivaikkaamal, vilakkuth thandinmael vaippaarkal; appozhuthu athu veettilulla yaavarukkum velicham kodukkum.
Matthew 5:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
- Open Tamil Contemporary Version
- மக்கள் விளக்கைக் கொளுத்தி அதை ஒரு பாத்திரத்தினால் மூடி வைக்கமாட்டார்களே. அவர்கள் அதை விளக்குத்தண்டின் மேல் உயர்த்தி வைப்பார்கள், அப்பொழுது அது வீட்டிலுள்ள எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும்.
- Tamil Easy Reading Version
- மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது.
Matthew 5:15 in English
- King James Version (KJV)
- Neither do men light a candle, and put it under a bushel, but on a candlestick; and it giveth light unto all that are in the house.
- World English Bible (WEB)
- Neither do you light a lamp and put it under a measuring basket, but on a stand; and it shines to all who are in the house.
- American Standard Version (ASV)
- Neither do [men] light a lamp, and put it under the bushel, but on the stand; and it shineth unto all that are in the house.
- Bible in Basic English (BBE)
- And a burning light is not put under a vessel, but on its table; so that its rays may be shining on all who are in the house.
- Darby Translation (DBY)
- Nor do [men] light a lamp and put it under the bushel, but upon the lamp-stand, and it shines for all who are in the house.
- Webster's Bible (WBS)
- Neither do men light a candle, and put it under a close vessel, but on a candlestick: and it giveth light to all that are in the house.
- Young's Literal Translation (YLT)
- nor do they light a lamp, and put it under the measure, but on the lamp-stand, and it shineth to all those in the house;
Read in context
- 13நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
- 14நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
- 15விளக்கைக் கொளுத்தி மரக்காலால்மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
- 16இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
- 17நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கேவந்தேன்.
Cross references
- Luke 11:33 லூக்கா 11:33ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
- Mark 4:21 மாற்கு 4:21பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
- Luke 8:16 லூக்கா 8:16ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
- Numbers 8:2 எண்ணாகமம் 8:2நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
- Exodus 25:37 யாத்திராகமம் 25:37அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.