Nehemiah 12:37 in Tamil
அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்குவந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல் மட்டும் போனார்கள்.
Angaeyirunthu avarkal thangalukku ethiraana oorunivaasalukkuvanthabothu, alangaththaippaarkkilum uyaramaana thaaveethu nagaraththin padigalil aeri, thaaveethu veettinmaelaagak kizhakkaeyirukkira thanneer vaasal mattum ponaarkal.
Nehemiah 12:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான தண்ணீர்வாசலுக்கு வந்தபோது, மதிலைவிட உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல்வரை போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் ஊற்று வாசலின் அருகே மேட்டிலுள்ள தாவீதின் நகரத்தின் படிகளில் தொடர்ந்து மதிலின்மேல் ஏறி, தாவீதின் வீட்டுக்கு மேலாகக் கடந்து கிழக்கிலிருந்த தண்ணீர் வாசலுக்குப் போனார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் நீருற்றுள்ள வாசலுக்குச் சென்றனர். தாவீதின் நகரத்துக்கான வழியிலுள்ள படிக்கட்டுகளில் அவர்கள் நடந்துச் சென்றனர். அவர்கள் நகரச்சுவரின் மேல் நின்றார்கள். அவர்கள் தாவீதின் வீட்டின் மேல் நடந்து நீருற்று வாசலுக்குக் சென்றனர்.
Nehemiah 12:37 in English
- King James Version (KJV)
- And at the fountain gate, which was over against them, they went up by the stairs of the city of David, at the going up of the wall, above the house of David, even unto the water gate eastward.
- World English Bible (WEB)
- By the spring gate, and straight before them, they went up by the stairs of David’s city, at the ascent of the wall, above David’s house, even to the water gate eastward.
- American Standard Version (ASV)
- And by the fountain gate, and straight before them, they went up by the stairs of the city of David, at the ascent of the wall, above the house of David, even unto the water gate eastward.
- Bible in Basic English (BBE)
- And by the doorway of the fountain and straight in front of them, they went up by the steps of the town of David, at the slope up of the wall, over the house of David, as far as the water-doorway to the east.
- Darby Translation (DBY)
- And at the fountain-gate, and over against them, they went up by the stairs of the city of David, at the ascent of the wall, above the house of David, even to the water-gate eastward.
- Webster's Bible (WBS)
- And at the fountain-gate, which was over against them, they went up by the stairs of the city of David, at the ascent of the wall, above the house of David, even to the water-gate eastward.
- Young's Literal Translation (YLT)
- and by the gate of the fountain and over-against them, they have gone up by the steps of the city of David, at the going up of the wall beyond the house of David, and unto the water-gate eastward.
Read in context
- 35பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக்குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,
- 36தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனேயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.
- 37அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்குவந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல் மட்டும் போனார்கள்.
- 38துதிசெய்கிற இரண்டாம்கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்து போனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில்பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,
- 39எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டு வாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
Cross references
- Nehemiah 2:14 நெகேமியா 2:14அவ்விடத்தை விட்டு ஊருணிவாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
- Nehemiah 3:26 நெகேமியா 3:26ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.
- Nehemiah 8:3 நெகேமியா 8:3தண்ணீர் வாசலுக்கு முன்னானவீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
- Nehemiah 8:16 நெகேமியா 8:16அப்படியே ஜனங்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிரகாரங்களிலும், தண்ணீர் வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
- Nehemiah 8:1 நெகேமியா 8:1ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
- Nehemiah 3:15–16 நெகேமியா 3:15–16ஊருணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்மட்டாக இருக்கிறதையும் கட்டினான். அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய அஸ்பூகின் குமாரன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடு மட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
- 2 Samuel 5:7–9 2 சாமுவேல் 5:7–9ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது, அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு. அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.
Original words (Hebrew)
- fountain · H5869עַיִן ʻayin
- gate · H8179שַׁעַר shaʻar
- up · H5927עָלָה ʻâlâh
- stairs · H4609מַעֲלָה maʻălâh
- city · H5892עִיר ʻîyr
- David · H1732דָּוִד Dâvid
- up · H4608מַעֲלֶה maʻăleh
- wall · H2346חוֹמָה chôwmâh
- house · H1004בַּיִת bayith
- David · H1732דָּוִד Dâvid
- water · H4325מַיִם mayim
- gate · H8179שַׁעַר shaʻar
- eastward · H4217מִזְרָח mizrâch
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.