Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 9:29 in Tamil

அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; ஆனாலும் அவர்கள் அகங்காரங்கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.

Avarkalai ummudaiya niyaayappiramaanaththukkuth thiruppa avarkalaith thidasaatchiyaayk kadinthugondeer; aanaalum avarkal agangaarangondu, ummudaiya karpanaigalukkus sevigodaamal, keezhppadinthu nadakkira manushan seythu pizhaikkira ummudaiya neethi niyaayangalukku virothamaagap paavanjseythu, thangal tholai muranduththanamaay vilakki, sevigodaamal, thangal kazhuththaik kadinappaduththikkondaarkal.

Nehemiah 9:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்திற்குத் திருப்ப அவர்களைத் அதிகமாகக் கடிந்துகொண்டீர்; ஆனாலும் அவர்கள் ஆணவம்கொண்டு, உம்முடைய கற்பனைகளைக் கேட்காமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனிதன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரட்டுத்தனமாக விலக்கி, கற்பனைகளைக் கேட்காமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.
Open Tamil Contemporary Version
“உமது சட்டத்தின்படி நடக்கத் திரும்பும்படி எச்சரித்தீர்; ஆனால் அவர்களோ, மிகவும் இறுமாப்பாய் நடந்து, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். உமது விதிமுறைகளுக்கு ஒருவன் கீழ்ப்படிந்தால், அவன் வாழ்வைப் பெறுவான் என்பதை அறிந்தும், அவர்களோ உமது விதிமுறைகளுக்கு எதிராய் பாவம் செய்தார்கள். பிடிவாதமாய் அவர்கள் தங்கள் முதுகை உமக்குத் திருப்பி அடங்காதவர்களாய் உமக்குச் செவிசாய்க்காமல் போனார்கள்.
Tamil Easy Reading Version
நீர் அவர்களை எச்சரித்தீர். அவர்களை மீண்டும் வரும்படி சொன்னீர். ஆனால் அவர்கள் அகங்காரம் கொண்டனர். அவர்கள் உமது கட்டளையைக் கேட்க மறுத்தனர். ஜனங்கள் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் பிறகு அவர்கள் உண்மையில் வாழ்வார்கள். ஆனால் எங்கள் முற்பிதாக்கள் உமது சட்டங்களை மீறினார்கள். அவர்கள் பிடிவாதமானவர்கள். அவர்கள் தமது முதுகை உமக்குத் திருப்பினார்கள். அவர்கள் கவனிக்க மறுத்தனர்.

Nehemiah 9:29 in English

King James Version (KJV)
And testifiedst against them, that thou mightest bring them again unto thy law: yet they dealt proudly, and hearkened not unto thy commandments, but sinned against thy judgments, (which if a man do, he shall live in them;) and withdrew the shoulder, and hardened their neck, and would not hear.
World English Bible (WEB)
and testified against them, that you might bring them again to your law. Yet they were arrogant, and didn’t listen to your commandments, but sinned against your ordinances (which if a man does, he shall live in them), turned their backs, stiffened their neck, and would not hear.
American Standard Version (ASV)
and testifiedst against them, that thou mightest bring them again unto thy law. Yet they dealt proudly, and hearkened not unto thy commandments, but sinned against thine ordinances (which if a man do, he shall live in them), and withdrew the shoulder, and hardened their neck, and would not hear.
Bible in Basic English (BBE)
And gave witness against them so that you might make them come back again to your law: but their hearts were lifted up, and they gave no attention to your orders and went against your decisions (which, if a man keeps them, will be life to him), and turning their backs on you, made their necks stiff and did not give ear.
Darby Translation (DBY)
And thou testifiedst against them, that thou mightest bring them again unto thy law; but they dealt proudly, and hearkened not unto thy commandments, but sinned against thine ordinances (which if a man do, he shall live in them); and they withdrew the shoulder, and hardened their neck, and would not hear.
Webster's Bible (WBS)
And testifiedst against them, that thou mightest bring them again to thy law: yet they dealt proudly, and hearkened not to thy commandments, but sinned against thy judgments, (which if a man doeth, he shall live in them:) and withdrew the shoulder, and hardened their neck, and would not hear.
Young's Literal Translation (YLT)
and dost testify against them, to bring them back unto Thy law; and they — they have acted proudly, and have not hearkened to Thy commands, and against Thy judgments have sinned, — which man doth and hath lived in them — and they give a refractory shoulder, and their neck have hardened, and have not hearkened.

Read in context

  1. 27ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.
  2. 28அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.
  3. 29அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; ஆனாலும் அவர்கள் அகங்காரங்கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.
  4. 30நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்கள் அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.
  5. 31ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.
Read all of Nehemiah 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.