Numbers 18:2 in Tamil
உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.
Un thagappanaagiya laeviyin koththiraththaaraana un sagothararaiyum unnodae koodiyirukkavum unnidaththilae saevikkavum avarkalais saerththukkol; neeyum un kumaararumo saatchiyin koodaaraththukkumun oozhiyam seyyakkadaveerkal.
Numbers 18:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னுடைய தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன்னுடைய சகோதரர்களையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன்னுடைய மகன்களுமோ சாட்சியின் கூடாரத்திற்குமுன்பு ஊழியம் செய்யவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- நீயும், உன் மகன்களும் சாட்சிபகரும் கூடாரத்திற்கு முன்பாகப் பணிசெய்யும்போது, உங்களுடன் சேர்ந்து உங்களுக்கு உதவிசெய்வதற்கு உங்கள் முற்பிதாக்களின் கோத்திரத்திலிருந்து, உங்கள் உடன் ஒத்த லேவியரை கொண்டுவர வேண்டும்.
- Tamil Easy Reading Version
- உனது கோத்திரத்தில் உள்ள மற்ற வேவியர்களையும் உங்களோடுச் சேர்த்துக்கொள். ஆசரிப்புக் கூடாரத்தில் நீங்களும் உங்கள் மகன்களும் செய்யும் வேலைகளுக்கு அவர்கள் உதவுவார்கள்.
Numbers 18:2 in English
- King James Version (KJV)
- And thy brethren also of the tribe of Levi, the tribe of thy father, bring thou with thee, that they may be joined unto thee, and minister unto thee: but thou and thy sons with thee [shall minister] before the tabernacle of witness.
- World English Bible (WEB)
- Bring your brothers also, the tribe of Levi, the tribe of your father, near with you, that they may be joined to you, and minister to you; but you and your sons with you shall be before the Tent of the Testimony.
- American Standard Version (ASV)
- And thy brethren also, the tribe of Levi, the tribe of thy father, bring thou near with thee, that they may be joined unto thee, and minister unto thee: but thou and thy sons with thee shall be before the tent of the testimony.
- Bible in Basic English (BBE)
- Let your brothers, the family of Levi, come near with you, so that they may be joined with you and be your servants: but you and your sons with you are to go in before the ark of witness.
- Darby Translation (DBY)
- And thy brethren also, the tribe of Levi, the tribe of thy father, bring near with thee, that they may unite with thee, and minister unto thee; but thou and thy sons with thee [shall serve] before the tent of the testimony.
- Webster's Bible (WBS)
- And thy brethren also of the tribe of Levi, the tribe of thy father, bring thou with thee, that they may be joined to thee, and minister to thee: but thou and thy sons with thee [shall minister] before the tabernacle of witness.
- Young's Literal Translation (YLT)
- and also thy brethren, the tribe of Levi, the tribe of thy father, bring near with thee, and they are joined unto thee, and serve thee, even thou and thy sons with thee, before the tent of the testimony.
Read in context
- 1பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.
- 2உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.
- 3அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுக்களண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,
- 4உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும்செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.
Cross references
- Genesis 29:34 ஆதியாகமம் 29:34பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.
- Numbers 8:19 எண்ணாகமம் 8:19லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.
- Numbers 3:6–13 எண்ணாகமம் 3:6–13நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து. அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யக்கடவர்கள். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள். ஆகையால் லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள். முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன் மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.
- Numbers 4:15 எண்ணாகமம் 4:15பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக் கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
- Numbers 16:40 எண்ணாகமம் 16:40ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
- Ezekiel 44:15 எசேக்கியேல் 44:15இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- 2 Chronicles 30:16 2 நாளாகமம் 30:16தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்.
- 1 Chronicles 16:39–40 1 நாளாகமம் 16:39–40கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களைநித்தமும், அந்திசந்தியில், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக, அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் வைத்து,
- Numbers 8:22 எண்ணாகமம் 8:22அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.
- Numbers 18:4 எண்ணாகமம் 18:4உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும்செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.
- Numbers 17:7 எண்ணாகமம் 17:7அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமூகத்தில் வைத்தான்.
Original words (Hebrew)
- brethren · H251אָח ʼâch
- tribe · H4294מַטֶּה maṭṭeh
- Levi · H3878לֵוִי Lêvîy
- tribe · H7626שֵׁבֶט shêbeṭ
- father · H1אָב ʼâb
- bring · H7126קָרַב qârab
- joined · H3867לָוָה lâvâh
- minister · H8334שָׁרַת shârath
- sons · H1121בֵּן bên
- before · H6440פָּנִים pânîym
- tabernacle · H168אֹהֶל ʼôhel
- witness · H5715עֵדוּת ʻêdûwth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.