Numbers 18:32 in Tamil
இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.
Ippadi athil uchithamaanathai aereduththup padaiththeerkalaanaal, neengal athinimiththam paavam sumakkamaatteerkal; neengal saagaathirukkumbadikku, isravael puththirarin parisuththamaanavaigalaith theettuppaduththalaagaathu endru sol endraar.
Numbers 18:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்படி அதில் சிறந்ததை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதற்காக பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படி, இஸ்ரவேல் மக்களின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தக்கூடாது என்று சொல்” என்றார்.
- Open Tamil Contemporary Version
- இவ்வாறு மிகத் திறமையானவற்றை நீங்கள் கொடுப்பதால் காணிக்கைபற்றிய விஷயத்தில் குற்றமற்றவர்களாயிருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் இஸ்ரயேலரின் பரிசுத்த காணிக்கையை அசுத்தப்படுத்தவுமாட்டீர்கள்; நீங்கள் சாகவுமாட்டீர்கள் என்று சொல்’ ” என்றார்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் எப்போதும் உங்கள் பங்கிலுள்ள சிறந்த பகுதியை மட்டும் கர்த்தருக்குக் கொடுத்து வந்தால் பிறகு எப்போதும் நீங்கள் குற்றவாளியாகமாட்டீர்கள். அந்த அன்பளிப்புகளை எல்லாம் இஸ்ரவேல் ஜனங்களால் தரப்பட்டப் பரிசுத்த காணிக்கைகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும், அப்போது நீங்கள் அழியமாட்டீர்கள்” என்று கூறினார்.
Numbers 18:32 in English
- King James Version (KJV)
- And ye shall bear no sin by reason of it, when ye have heaved from it the best of it: neither shall ye pollute the holy things of the children of Israel, lest ye die.
- World English Bible (WEB)
- You shall bear no sin by reason of it, when you have heaved from it its best. You shall not profane the holy things of the children of Israel, that you not die.’”
- American Standard Version (ASV)
- And ye shall bear no sin by reason of it, when ye have heaved from it the best thereof: and ye shall not profane the holy things of the children of Israel, that ye die not.
- Bible in Basic English (BBE)
- And no sin will be yours on account of it, when the best of it has been lifted up on high; you are not to make a wrong use of the holy things of the children of Israel, so that death may not overtake you.
- Darby Translation (DBY)
- And ye shall bear no sin by reason of it, if ye heave from it the best of it; and ye shall not profane the holy things of the children of Israel, lest ye die.
- Webster's Bible (WBS)
- And ye shall bear no sin by reason of it, when ye have heaved from it the best of it: neither shall ye pollute the holy things of the children of Israel, lest ye die.
- Young's Literal Translation (YLT)
- and ye bear no sin for it, in your lifting up its fat out of it, and the holy things of the sons of Israel ye do not pollute, and ye die not.'
Read in context
- 30ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.
- 31அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.
- 32இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.
Cross references
- Leviticus 19:8 லேவியராகமம் 19:8அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச்சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
- Leviticus 22:2 லேவியராகமம் 22:2இஸ்வேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.
- Leviticus 22:15–16 லேவியராகமம் 22:15–16அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும், அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
- 1 Corinthians 11:29 1 கொரிந்தியர் 11:29என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.
- 1 Corinthians 11:27 1 கொரிந்தியர் 11:27இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
- Numbers 18:22 எண்ணாகமம் 18:22இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள்.
- Malachi 1:7 மல்கியா 1:7என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.