Numbers 5:15 in Tamil
அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.
Anthap purushan than manaiviyai aasaariyanidaththil azhaiththukkonduvanthu, aval nimiththam oru eppaa alavaana vaarkothumai maavilae paththil oru pangaip padaippaagak kodukkakkadavan; athu erichalin kaanikkaiyum akkiramaththai ninaippoottum kaanikkaiyumaay iruppathinaal, athinmael enney vaarkkaamalum thoobavarkkam podaamalum iruppaanaaga.
Numbers 5:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அவ்வாறு நடந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அத்துடன் அவன் பத்தில் ஒரு பங்கு எப்பா அளவான வாற்கோதுமை மாவை அவளுக்கான காணிக்கையாகக் கொண்டுபோக வேண்டும். அதன்மேல் எண்ணெயை ஊற்றவோ, நறுமணத்தூளைப் போடவோ கூடாது. ஏனெனில், அது எரிச்சலுக்கான தானிய காணிக்கை. அது ஒருவனின் குற்றத்தை எடுத்துக்காட்டும் நினைவூட்டும் காணிக்கை.
- Tamil Easy Reading Version
- இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக்கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும்.
Numbers 5:15 in English
- King James Version (KJV)
- Then shall the man bring his wife unto the priest, and he shall bring her offering for her, the tenth [part] of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it [is] an offering of jealousy, an offering of memorial, bringing iniquity to remembrance.
- World English Bible (WEB)
- then the man shall bring his wife to the priest, and shall bring her offering for her: one tenth of an ephah of barley meal. He shall pour no oil on it, nor put frankincense on it, for it is a meal offering of jealousy, a meal offering of memorial, bringing iniquity to memory.
- American Standard Version (ASV)
- then shall the man bring his wife unto the priest, and shall bring her oblation for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is a meal-offering of jealousy, a meal-offering of memorial, bringing iniquity to remembrance.
- Bible in Basic English (BBE)
- Then let him take her to the priest, offering for her the tenth part of an ephah of barley meal, without oil or perfume; for it is a meal offering of a bitter spirit, a meal offering keeping wrongdoing in mind.
- Darby Translation (DBY)
- — then shall the man bring his wife unto the priest, and he shall bring her offering for her, a tenth part of an ephah of barley-meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is an oblation of jealousy, a memorial oblation, bringing iniquity to remembrance.
- Webster's Bible (WBS)
- Then shall the man bring his wife to the priest, and he shall bring her offering for her, the tenth [part] of an ephah of barley-meal; he shall pour no oil upon it, nor put frankincense upon it; for it [is] an offering of jealousy, an offering of memorial, bringing iniquity to remembrance.
- Young's Literal Translation (YLT)
- 'Then hath the man brought in his wife unto the priest, and he hath brought in her offering for her, a tenth of the ephah of barley meal, he doth not pour on it oil, nor doth he put on it frankincense, for it [is] a present of jealousy, a present of memorial, causing remembrance of iniquity.
Read in context
- 13ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும், அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிற போதும்,
- 14எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும்,
- 15அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.
- 16ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
- 17ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்திலே போட்டு,
Cross references
- Ezekiel 29:16 எசேக்கியேல் 29:16அவர்களின் பிறகே போய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குத் தங்கள் அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடிக்கு, இனி அவர்கள் இவர்களுடையநம்பிக்கையாயிராமற்போவார்கள்; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
- 1 Kings 17:18 1 இராஜாக்கள் 17:18அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தைநினைக்கப்பண்ணவும், என் குமாரனைச்சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.
- Leviticus 5:11 லேவியராகமம் 5:11இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால, அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து,
- Hebrews 10:3 எபிரெயர் 10:3அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
- Leviticus 2:1 லேவியராகமம் 2:1ஒருவன் போஜன பலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,
- Hosea 3:2 ஓசியா 3:2அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
Original words (Hebrew)
- man · H376אִישׁ ʼîysh
- bring · H935בּוֹא bôwʼ
- wife · H802אִשָּׁה ʼishshâh
- priest · H3548כֹּהֵן kôhên
- bring · H935בּוֹא bôwʼ
- offering · H7133קׇרְבָּן qorbân
- tenth · H6224עֲשִׂירִי ʻăsîyrîy
- ephah · H374אֵיפָה ʼêyphâh
- barley · H8184שְׂעֹרָה sᵉʻôrâh
- meal · H7058קֶמַח qemach
- pour · H3332יָצַק yâtsaq
- oil · H8081שֶׁמֶן shemen
- put · H5414נָתַן nâthan
- frankincense · H3828לְבוֹנָה lᵉbôwnâh
- offering · H4503מִנְחָה minchâh
- jealousy · H7068קִנְאָה qinʼâh
- offering · H4503מִנְחָה minchâh
- memorial · H2146זִכְרוֹן zikrôwn
- bringing · H2142זָכַר zâkar
- iniquity · H5771עָוֺן ʻâvôn
- remembrance · H2142זָכַר zâkar
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.